Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ராசி: 25.10.09 முதல் 31.10.09 வரை
 
.
Saturday, 24 October, 2009 04:04 PM
.

மேஷம்
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே இந்த வாரம் உங்கள் ராசிக்கு 3ல் உலாவரும் கேதுவும் 9ல் உலா வரும் ராகுவும் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பாக இல்லாவிட்டாலும் அவர்கள் இருக்கும் வீடு நட்பு வீடு ஆததால் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

 

.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.  

பெண்களுக்கு: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை. 

மாணவர்களுக்கு:  கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: பழமுதிர்ச்சோலை முருகனை வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும். 

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் ரிஷபராசியினரே இந்த வாரம் உங்கள் ராசிக்கு இரண்டில் உலாவரும் கேதுவும் ராசிக்கு 8ல் உலாவரும் ராகுவும் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமாக இருப்பதாலும் அவர்கள் சஞ்சாரம் செய்யும் ராசியும் நட்பு ராசியாக இருப்பதாலும் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.  மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்க ளுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர் களிடம் கவனமாக பழகுவது நல்லது. 

பெண்களுக்கு:  எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.    

மாணவர்களுக்கு:  கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

சந்திராஷ்டமம்:  25.10.2009 அன்று பகல் 1.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்:  பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்ற மிதுன ராசியினரே இந்த வாரம் ராசியில் சஞ்சாரம் செய்யும் கேதுவும், ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்யும் ராகுவும் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு பகை கிரகம் இல்லாததாலும், சஞ்சரிக்கும் ராசி நட்பு ராசியாக இருப்பதாலும் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம்  மனஸ்தாபம் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக் கிடையே  சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு: அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.
 
மாணவர்களுக்கு: கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.

சந்திராஷ்டமம்:  25.10.2009 பகல் 1.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 27.10.2009 இரவு 1.20 மணி வரை இருப்பதால் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.

பரிகாரம்:  திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

அனைவரிடமும் அனுசரித்து செல்லும் குணமுடைய  கடக ராசியினரே, இந்த வாரம் ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்யும் கேதுவும், ராசிக்கு 6ல்  சஞ்சாரம் செய்யும் ராகுவும் நட்பு ராசியில் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு நன்மையே செய்வார்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள்  உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர்  புரிந்து கொண்டு செயல் படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். 

பெண்களுக்கு:  தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு:  கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்:  27.10.2009 இரவு 1.20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 30.10.2009 அன்று பகல் 12 மணி வரை இருப்பதால் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது.

பரிகாரம்:  பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

சிம்மம்
(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் உடைய சிம்ம ராசியினரே இந்த வாரம் ராசிக்கு 5ல் சஞ்சாரம் செய்யும்  ராகுவும், ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்யும் கேதுவும் நட்பு ராசியில் சஞ்சாரம் செய்வதாலும் பொரு ளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை  சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி  வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம்.  சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்த சேரும். வருமானம் கூடும்.

குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக  பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே  நிதான மான போக்கு காணப்படும். பிள்ளை களின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு:  மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு:  கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 30.10.2009 அன்று பகல் 12.00 மணி முதல் தொடங்கி 31.10.2009 அன்று முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.

பரிகாரம்:  பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தியையும வணங்க எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுடைய கன்னி ராசியினரே, இந்த வாரம் ராசிக்கு 4ல் ராகுவும், 10ல் கேதுவும் சஞ்சாரம் செய்வது பணவரவு தரும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள்  வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும்.  மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணி யாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தை களின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனகசப்பு மாறும்.
பெண்களுக்கு:  வீண் வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு:  கல்வி தொடர்பான செலவு கூடும்.  கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.

சந்திராஷ்டமம்:  இல்லை

பரிகாரம்:  ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி வர காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். 

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் மிகுந்த துலாராசியினரே, இந்த வாரம் ராசிக்கு 9ல் கேதுவும், ராசிக்கு மூன்றில் ராகுவும் சஞ்சாரம் செய்வது முன்கோபத்தை தந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின்  சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.  சக  ஊழியர் களிடம் நிதானமாக பேசுவது நல்லது. 

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் கூடும். பிள்ளை களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

பெண்களுக்கு:  முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்களுக்கு:  மிகவும் கவனத்துடன்  பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

சந்திராஷ்டமம்:  இல்லை

பரிகாரம்: மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனகுழப்பம் தீரும்.

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

அமைதியாக இருக்கும் அதேநேரத்தில் எதிர்ப்புகள் வந்தால் எரிமலையாகிவிடும் விருச்சிகராசியினரே இந்த வாரம் ராசிக்கு இரண்டில் ராகுவும் எட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளை களிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. 

பெண்களுக்கு:  அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். 

மாணவர்களுக்கு:  கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். 

சந்திராஷ்டமம்:   இல்லை

பரிகாரம்:  மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு
(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க  தெரிந்த தனுசு ராசியினரே இந்த வாரம் ஜென்ம ராசியில் ராகுவும், ராசிக்கு 7ல் கேதுவும் சஞ்சாரம் செய்வது ஏதாவது  பிரச்சனைகளை  கொடுத்தாலும் அவை நல்லபடியாக தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

பெண்களுக்கு: எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 

மாணவர்களுக்கு: கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். 

சந்திராஷ்டமம்:   இல்லை

பரிகாரம்: திருவண்ணாமலை ரமணா ஸ்ரமத்தில் ஸ்ரீரமண மகரிஷியை வணங்க மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும்.

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பதிலும் தயங்காத மகர ராசியினரே இந்த வாரம் ராசிக்கு 6ல்  கேதுவும், 12ல் ராகுவும்  சஞ்சாரம் செய்வது வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி  அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்,  சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு:  அடுத்தவர் கூறும் கருத்துக்களை  அப்படியே  ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. 

மாணவர்களுக்கு:  எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது. 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்:  சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைக்க மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

உழைப்புக்கு பலன் உண்டு என்பதில்  எள்ளளவும்  மாற்று கருத்து  இல்லாத கும்பராசியினரே இந்த வாரம் ராசிக்கு 5ல்  கேதுவும், 11ல்  ராகுவும் சஞ்சாரம் செய்வது மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும்  செய்து முடிக்கும்  திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.  ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர் களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தின ருடன்  கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.  

பெண்களுக்கு: திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். 
மாணவர்களுக்கு:  கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.

சந்திராஷ்டமம்:  இல்லை

பரிகாரம்:  வியாழக்கிழமையில்  ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வணங்குவது  மனோ தைரியத்தை தரும். எதிர்ப்புகள் விலகும். 

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எந்த சூழ்நிலையையும்  அனுசரித்து  செல்லும் திறமை உடைய மீன ராசியினரே, இந்தவாரம் ராசிக்கு 4ல் கேதுவும், 10ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.    

பெண்களுக்கு: எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. 

மாணவர்களுக்கு:  கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திர  ஸ்வாமியை வழிபட்டுவர காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
| |

மற்றவை :