Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சிறுவரை கவர வரும் பாலகணேஷ்2
 
.
Monday, 12 October, 2009 12:31 PM
.
சென்னை, அக்.12:சிறுவர்களுக்கான 3டி அனிமேஷன் படமான பாலகணேஷ்2 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக  உள்ளது.ஷெமாரு என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அஸ்டியூட் மீடியா விஷன் நிறுவனத்தோடு இணைந்து பாலகணேஷ்2 திரைப்படத்தை உருவாக்கி உள்ளது.
.
ஏற்கனவே வெற்றி பெற்ற பாலகணேஷ் அனிமேஷன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விநாயகர் எப்படி கஜமுகாசுரன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து உலகை காக்கிறார் என்பது அனிமேஷன் சித்திரமாக விவரிக்கப்படுகிறது.

நல்ல இசை மற்றும் நகைச்சுவை யோடு இந்த அனிமேஷன் சித்திரம் அமைந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது. இந்தியா முழுவதும் இந்த திரைப்படம் வெளியாகிறது. பாலகணேஷ் திரைப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
| |

மற்றவை :