Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பிரேம் நடிக்கும் வழிப்போக்கன்
 
.
Sunday, 11 October, 2009 11:09 AM
.
"குரோதம்' படத்தில் அறிமுகமான பிரேம் "வழிப்போக்கன்' எனும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார்.கதை, திரைக்கதை வசனம் எழுதி அவரே இயக்கவும் உள்ளார்."எ லோட்டஸ் பிலிம்' கம்பெனி சார்பில் இந்திராபிரேம் தயாரிக்கும் இந்தப் படத்தில் 2 கதாநாயகிகளாம். காரைக்குடி, குற்றாலம், பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கின்றனராம்.
.
கிராமிய கலாச்சாரத்தை மையமாக கொண்டு காதல், காமெடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனராம்.இந்த படத்திற்காக இயக்குனர் பிரேம் மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வருட காலம் மக்களோடு மக்களாக தங்கியிருக்கிறாராம். எனவே மண்வாசனை யோடு காட்சிகள் அமையும் என்று அவர் உறுதி அளிக்கிறார்.

 அதே நேரத்தில் அமெரிக்க தொழில்நுட்ப யுக்தியையும் பயன்படுத்த உள்ளனர். பாடல் காட்சிகளுக்காக சுவிட்சர் லாந்து, ஆஸ்திரேலியா, போலந்து, நைஜீரியா ஆகிய நாடுகளில் படமெடுக்க உள்ளனர்.
| |

மற்றவை :