Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சாமி வந்து ஆடிய நாயகன்
 
.
Sunday, 11 October, 2009 10:52 AM
.
கதைக்களம் எதுவாக இருந்தாலும் சரி, பாடல்களை மட்டும் வண்ண மயமான பின்னணியில் படமாக்குவதுதான் வழக்கம்.
பல இயக்குனர்கள் ஒரு பாடலுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வருவதும் உண்டு. ஆனால் வானம் பார்த்த சீமையிலே படத்திலோ பொட்டல் வெளிகளில் பாடல்களை படமாக்கி உள்ளனராம்.
.
பிரமிட் சாய்மீராவுக்காக தெய்வானை மூவிஸ் சார்பில் அமுதா துரைராஜ், கே.சி.என்.சந்திரசேகர் தயாரிக்கும் இந்த படத்தை ஜேப்பி அழகர் இயக்குகிறார்.இந்தப் படத்தில் பிடிச்சிருக்கு பட நாயகன் அசோக் குமார் நடிக்க அவருக்கு ஜோடியாக வெயில் படத்தில் நடித்த பிரியங்கா நடித்திருக்கிறார்.

கோவை, மதுரை, நெல்லை ஆகிய வட்டார வழக்குகள்தான் இதுவரை தமிழ் சினிமாவை ஆண்டு இருக்கின்றன.ராமநாதபுரம் வட்டா வழக்கை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

"வானம் பார்த்த சீமையிலே' எனும் பெயருக்கு ஏற்ப ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்வியலை இயல்பாக சொல்லும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வறட்சியான பொட்டல்வெளிகளில் எடுக்கப் பட்டுள்ளது. பாடல் காட்சிகளையும் கூட பசுமையான இடங்களுக்கு செல்லாமல் இங்கேயே எடுத்திருக் கிறார் இயக்குனர்.

இந்தப் படத்தில் கருப்பண்ணசாமி கோயில் ஒரு பாத்திரமாகவே வரும்படி கதையை அமைத்திருக்கிறாராம்.  இந்த படத்திற்காக இயக்குனர் ஒரு கோயிலையே உருவாக்கி இருக்கிறார். கதைப்படி நாயகன் அசோக் குமார் வீம்பும், வீராப்பும் கொண்ட இளைஞனாம்.

படத்தில் முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுப்பது போன்ற காட்சியில் நடித்தபோது, அசோக் குமாருக்கு உண்மையிலேயே சாமி வந்து விட்டதாம்.ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பழனிபாரதி, நந்தலாலா பாடல்களை எழுதியுள்ளனர்.
| |

மற்றவை :