Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
அமீரின் விருப்பம்
 
.
Thursday, 08 October, 2009 11:35 AM
.
சென்னை,அக்.8:சிம்பு, ஜீவா, ஜெயம்ரவி போன்ற இளம் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இயக்குனர் அமீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.ரேனிகுண்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமீர் கூறியதாவது:
.
இந்த விழாவுக்கு விஜயகாந்த் வந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதேபோல திரைப்பட விழாக்களில் விஜயகாந்த், சரத்குமார், ரஜினி, கமல் ஆகியோர் சேர்ந்து பங்கேற்க  வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற என்னுடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளம் நடிகர்கள் ஜீவா, ஜெயம் ரவி, சிம்பு ஆகியோர் கலந்துகொண்டனர். இதனால் இளம் நடிகர்களிடையே ஒற்றுமை இருப்பதைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிறிது நேரம் மேடையில் சேர்ந்து அமர்ந்ததற்கே மகிழ்ந்த ரசிகர்கள் இந்த நடிகர்கள் ஒரு படத்தில் இணைந்து நடித்தால், எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்.சசிகுமார் போன்ற உதவி இயக்குனர்கள் பெரிய இயக்குனர்க ளாக உருவாகியிருக்கின்றனர். இளம் இயக்குனர்கள் எங்களுக்கு போட்டியாக உருவாகியிருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரேனிகுண்டா திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சிட்டி ஆப் காட் படத்தை நினைவு படுத்துவதாக அமீர் பாராட்டு தெரிவித்தார்.
| |

மற்றவை :