இந்த பாராட்டால் உருகிப்போயிருக்கும் அபர்ணா கண்ணுக்குள்ளே படத்தில் தனக்கு கிடைத்த பாத்திரம் உண்மையிலேயே அற்புதமானது என்று உற்சாகமாக கூறுகிறார்.
இளம் நாயகியாக இருந்தபோதிலும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக எப்படி நடித்தீர்கள் என்று கேட்டால், பாத்திரம் சிறப்பாக இருந்ததால் துணிந்து நடித்தேன் என்கிறார்.
எத்தகைய வேடம் என்பது முக்கியமல்ல. நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தால் போதும் என்று கூறும் அபர்ணா வயதான வேடம் கிடைத்தால் கூட நடிப்பேன் என்கிறார் அதிரடியாக.காதலாகி கசிந்து என்னும் நாட்டிய நாடகத்தை நடத்த திட்டமிட்டிருக்கும் அபர்ணா, ஈழம் தொடர்பான குறும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிக்கவில்லையே என்று கேட்டால், அதற்கென்ன செய்ய பல கதைகளைக்கேட்டாலும், பிடித்த கதையில் மட்டுமே நடிப்பதாக சொல்கிறார்.
கண்ணுக்குள்ளே படத்தில் வருவதுபோல கடந்த கால காதல் பிரச்சனை யாருக்காவது இருக்குமாயின் மனைவியோடு மனம் விட்டு பேசுவதே நல்லது என்றும் அவர் ஆலோசனை கூறுகிறார். |