Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
"கோவா'வில் கொண்டாட்டம்
 
.
Sunday, 04 October, 2009 12:44 PM
.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோவா படத்தின் கதை உண்மையிலேயே சுவாரசியமாக இருக்கிறது. படித்து விட்டு வேலை தேடும் நண்பர்கள், வேலை கிடைத்து வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பாக ஜாலியாக ஒரு டிரிப் போய் வருவோம் என்ற எண்ணத்தோடு சுற்றுலா நகரமான கோவாவுக்கு புறப்பட்டுச்செல்வதையடுத்து, ஏற்படும் சுவாரசியமான திருப்பங்களை கதையாக வெங்கட் பிரபு அமைத்திருக்கிறார்.
.
இந்த பயணத்தின்போது, நண்பர்கள்  எதிர்கொள்ளும் மோதல், காதல், சிக்கல் ஆகியவைதான் கதையை நகர்த்திச் செல்கிறதாம்.
சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆக்கர் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெய், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ், சம்பத், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசை வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான  யுவன் ஷங்கர் ராஜா. தனது முந்தைய படங்களின் சாயலே இல்லாமல் முழுக்க முழுக்க ஜாலி படமாக இதனை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறாராம்.ஜாலியான படம் என்றாலும் பஞ்ச் டயலாக் நிறைய வைத்திருக்கிறாராம்.

கோவாவில்தான் கதையின் பெரும்பகுதி நடக்கிறது. எனினும் கோவாவில் மழைக்காலம் என்பதால் மலேஷியா சென்று அங்கே உள்ள கடற்கரையில் பல காட்சிகளை படமாக்கியுள்ளனர்.மலேஷியாவில் மட்டும் 40 நாட்கள் ஷýட்டிங் நடந்திருக்கிறது. படத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெலனி என்னும் அழகி அறிமுகமாகிறார்.
| |

மற்றவை :