Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
15 நாள் சண்டைக்காட்சி
 
.
Sunday, 04 October, 2009 12:27 PM
.
தைரியம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பேசப்படும் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பு குழுவும்இருக்கிறது. காரணம் இந்த சண்டைக்காட்சியை மட்டும் 15 நாட்கள் எடுத்திருக்கின்றனராம்.புதுமுகம் குமரன் நடிக்க, சரோஜ் குமார் இயக்கியுள்ள இந்த படம் காதல் கலந்த ஆக்ஷன் படமாம்.
.

படத்தின் நாயகன்தான் தயாரிப்பாளரும் கூட. படத்திற்கு தைரியம் என்று பெயர் வைக்கச் சொன்னதும் அவர்தானாம்.
முதல் படம் என்பதால், நடனக்காட்சிகளில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டதாக கூறும் குமரன், ஒரு பாடல் காட்சியில் மட்டும் 21 டேக் வாங்கியதாக கூறுகிறார்.

நானே தயாரிப்பாளர் என்பதால் தப்பித்தேன் என்று சிரித்தபடி கூறும் குமரன், சண்டைக்காட்சிகளில் மட்டும் கூடுதல் ஆர்வத்தோடு நடித்திருக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் துணிந்து ரிஸ்க் எடுத்து மேலிருந்து குதித்தெல்லாம் நடித்திருக்கிறாராம். 
இந்த சண்டை காட்சி பற்றி இயக்குனர் சரோஜ் குமாரும் விசேஷமாக குறிப்பிடுகிறார்.

இந்த காட்சிக்காக 10 கார் கேட்டது போக, குமரன் 30 கார்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறும் அவர், சண்டை மிகவும் திரில்லாக வந்திருப்பதாக கூறுகிறார்.படத்தில் தீபு மற்றும் கார்த்திகா நாயகிகளாக நடித்துள்ளனர்.

சிரிப்பழகியான கார்த்திகாவை ஒரு பாடல் காட்சியில் சிரிக்கக்கூடாது என நிபந்தனை போட்டு நடிக்க வைத்தாராம் இயக்குனர்.

| |

மற்றவை :