Maalaisudar



 
 
 
 
 
 
 




.
எடிட்டிங்கில் ஏற்பட்ட திகில்
 
.
Sunday, 04 October, 2009 12:24 PM
.
இரா என்னும் சுருக்கமான பெயரோடு தயாராகியுள்ள  படத்திற்காக எடிட்டிங் செய்தபோது திகிலான அனுபவம் ஏற்பட்டிருக்கிறதாம்.ஷங்கர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் திரைக்கு வரத்தயாராக உள்ளது.
.
மூணாறில் ஆவிகள் நடமாடுவதாக நம்பப்படும் இடங்களில் படத்தின் அநேக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.இவற்றை கலர் கரக்ஷன் செய்துபார்த்தபோது, ஒரு காட்சியில் வெள்ளை உருவம் இடம் பெற்றிருந்ததாம்.

அது அமானுஷிய உருவமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அமெரிக்காவில் உள்ள அமானுஷிய ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், அந்த காட்சியை படத்தின் கிளைமாக்சில் இணைத்துள்ளனராம்.

ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண் மற்றும் கிருஷ்ணசேகர் ஆகிய மூவர் இந்த படத்தை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.புதிய தொழில்நுட்பமான வியூ பாய்ன்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹைடெக் திரில்லராக இந்த படம் இருக்கும். வெங்கட் பிரபு ஷங்கர் இசையமைத்துள்ளார்.
| |

மற்றவை :