பிரமீடு சாய்மீரா நிறுவனம், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துடன் இணைந்து மர்மயோகி என்ற படத்தை தயாரிக்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த படத்தில் நடிக்க நடிகர் கமல் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி 18 மாதங்களுக்கு வேறு எந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் கமல் அந்த ஒப்பந்தத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் சாய்மீரா பட நிறுவனம் மர்மயோகி படத்தை தயாரிக்கவில்லை. இதனால் கமலுக்கு 2 பட நிறுவனத்திடம் இருந்து வந்த வாய்ப்புகள் பறிபோயின.
இதனால் தனக்கு 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக 11 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும் பிரமீடு சாய்மீரா நிறுவனத்தின் மீது நடிகர் கமல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா வரும் 9ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமீடுசாய்மீரா பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். |