தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.
பெண்களுக்கு: எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 23.9.2009 காலை 9.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 25.9.2009 இரவு 7.15 மணி வரை இருப்பதால் காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: பழனி முருகனை வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கேற்ப விடா முயற்சியுடன் செயல்படும் ரிஷப ராசியினரே இந்த வாரம் இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். சந்திரன் சஞ்சாரம் விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலத்தை தரும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். வார இறுதியில் பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.
பெண்களுக்கு: மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
மாணவர்களுக்கு: கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம்: 25.9.2009 இரவு 7.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 26.9.2009 அன்று முழுவதும் இருப்பதால் காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.
பரிகாரம்: மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெறும் மிதுன ராசியினரே இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். வார மத்தியில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். வார இறுதியில் உறவினர் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் வார மத்தியில் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக் கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். வார இறுதியில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும்.
பெண்களுக்கு: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சீர்காழிக்கு அருகே உள்ள திருவாலியில் எழுந்தருளியிருக்கும் லஷ்மி நரசிம்மரை வணங்க குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல் மற்றவர் முன்பு செயல்படும் கடக ராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி சந்திரன் வார இறுதியில் சாதகமான பலனை தருவார். பணவரத்து, காரிய தடை நீங்கும். வார தொடக்கத்தில் மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வார மத்தியில் அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.
பெண்களுக்கு: மனக்கவலை உண்டாகும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங் களில் மெத்தன போக்கு காணப்படும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சகமாணவர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மதுரை மீனாட்சியம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பிரச்சனைகள் தீரும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
எந்த சூழ்நிலையிலும் சுயகவுரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படும் சிம்மராசியினரே இந்த வாரம் மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க செய்யும். பணவரத்து அதிகரிக்கும். வார மத்தியிலும் இறுதியிலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள்.
பெண்களுக்கு: மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய அனுகூலம் உண்டாகும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) அனுபவ அறிவைக் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் திறமை பெற்ற கன்னி ராசியினரே, இந்த வாரம் ஏதாவது மனகவலை இருக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் வார மத்தியில் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கயி முடிவுகளை எடுப்பீர்கள். வார தொடக்கத்திலும், வார இறுதியிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கு: எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: திருக்கோவிலூரில் எழுந் தருளியுள்ள திருவிக்கிரம பெருமாளை யும், தாயார் பூங்கோவல் நாச்சியாரையும் வணங்கி வர எந்த ரூபத்தில் பிரச்சனை வந்தாலும் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் அது நீங்கும். சுகம், சௌக்கியம் உண்டாகும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) அடுத்தவர் திருப்திபடும் வகையில் திறமையாக பேசி சமாளிக்கும் ஆற்றல் பெற்ற துலாராசியினரே. இந்தவாரம் பயணங்களால் நன்மை உண்டாகும். ஜென்மராசியில் வார தொடக்கத்தில் சஞ்சரிக்கும் சந்திரன் ஆதாயத்தை தருவார். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். வார மத்தியிலும் வார இறுதியிலும் எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமை யாக செயல்பட்டு பணிகளை வெற்றிகர மாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.
குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.
பெண்களுக்கு: திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும்.
மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: பவுர்ணமியன்று பூஜை செய்து அம்மனை வணங்க காரியதடை நீங்கும். மன அமைதி ஏற்படும். வாழ்க்கை சிறப்படையும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கட்டுபாடு இல்லாமல் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட விருச்சிகராசியினரே இந்த வாரம் திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் வீண் அலைச்சல், மனக்குழப்பம் வார தொடக்கத்தில் உண்டாகலாம். வார மத்தியில் நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். வார இறுதியில் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கை யாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.
குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும்.
பெண்களுக்கு: கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது.
மாணவர்களுக்கு: கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை யில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபட கஷ்டம் நீங்கும். போட்டி, பொறாமை அகலும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் குணம் கொண்ட தனுசு ராசியினரே, இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் வார தொடக்கத்திலும், இறுதியிலும் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.
தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கை யாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். வார மத்தியில் கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு: எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு: பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: திருவண்ணாமலை ஸ்ரீரமணமகரிஷியை வணங்க மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான மகர ராசியினரே இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். சந்திரன் சஞ்சாரத்தால் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். வார இறுதியில் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.
பெண்களுக்கு: உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறும் திறமை பெற்ற கும்பராசியினரே இந்த வாரம் எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தால் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பெண்களுக்கு: சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 20.09.2009 அன்று முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.
பரிகாரம்: ஆஞ்சனேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். மனோ தைரியம் கூடும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறும் மீன ராசியினரே இந்த வாரம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். வாரமத்தியிலும் இறுதியிலும் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.
தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தில் வார இறுதியில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.
பெண்களுக்கு: பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் மன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும்.
மாணவர்களுக்கு: ஆசிரியற்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 21.09.2009 அதிகாலை 2.45 மணிமுதல் சந்திராஷ்டமம் தொடங்கி 23.09.2009 காலை 9.50 மணி வரை இருப்பதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை. காரியதடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
பரிகாரம்: குலதெய்வத்தை பூஜை செய்து வணங்க சிக்கல்கள் தீரும். மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். |