தமிழகம் மற்றும் ஆந்திராவில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் இருக்கும் தொழில் அதிபரான ஆதித்யாராம், முன்னணி ஹுரோக்களை வைத்து ஒரே நேரத்தில் 10 மெகா பட்ஜெட் படங்களை தொடங்கி வியக்க வைத்தவர். தற்போதுபூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரபாஷ், கங்கனா ராவத் நடிக்கும் ஏக் நிரஞ்சன் படத்திற்காக பிரம்மாண்டமான செட் போட்டு பிரமிக்க வைத்திருக்கிறார்.
ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 8 ஏக்கர் பரப்பில் 3 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த செட் 8 தெருக்கள், 80 வீடுகள், பாலம், ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றோடு ஒரு மினி நகரமாகவே காட்சி அளித்தது.
கரடுமுரடான இடத்தை சமன் செய்து 3 மாத காலத்தில் இந்த செட்டை அமைத்துள்ளனர். இந்த செட்டை பார்த்த பொது மக்கள் படையெடுத்ததோடு அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடும் நடத்தி வருகின்றனராம்.
இந்த செட்டில் படப்பிடிப்பை நடத்த மற்ற தயாரிப்பாளர்களும் அனுமதி கேட்டுள்ளனராம்.
ஆந்திராவை கலக்கி வரும் ஆதித்யாராம் விரைவில் தமிழில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளாராம். |