Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ராசி: 13.9.09 முதல் 19.9.09 வரை
 
.
Monday, 14 September, 2009 04:15 PM
.

மேஷம்
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றும் மேஷராசியி னரே இந்த வாரம் சுக்கிரன், சூரியன் மாற்றத்தால் பல நன்மைகள் உண்டாகும். ராசிக்கு  4ல் இருந்த சுக்கிரன் 5க்கு செல்வதால் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவை யும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார்.  சூரியன் சஞ்சாரம் பகைகளை விலக்கும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள்  தொல்லை தராது.  போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக் கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளை கள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும்.  

பெண்களுக்கு: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை  வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள்.  கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

மாணவர்களுக்கு:  கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் அங்காரகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)


சரி என்று நினைப்பதை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்தும் ரிஷபராசியி னரே இந்த வாரம் சூரியன், சுக்கிரன் மாற்றத்தால் வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  ராசிக்கு 4ல்  சஞ்சாரம் செய்யும் சுக்கிரன் புதிய ஆடை அணிகலன் வாங்க தூண்டுவார். ஆடம்பரமாக செலவு செய்ய தோன்றும். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள்.  சிலர் புதிய வாகனம்  வாங்குவார்கள். ஆனால் ராசிக்கு 5ல் சஞ்சாரம் செய்யும் சூரியன் மனகுழப்பத்தை தருவார்.

தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும்.  அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவை யான வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற் றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தை யின் உடல்நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு:  ஆடை ஆபரணம் வாங்கு வீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனகவலை ஏற்படும். 

மாணவர்களுக்கு:  கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோ சனை  கூடுதல் மதிப்பெண் பெற உதவும். 

சந்திராஷ்டமம்:  இல்லை

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவ கிரகத்தில் சுக்கிரபகவானுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும.

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படும் மிதுனராசியினரே இந்த வாரம் சூரியன், சுக்கிரன் மாற்றத்தால் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். ராசிக்கு 4ல் சஞ்சாரம் செய்யும் சூரியன் வீட்டில் இருந்து வெளியில் தங்கும் சூழலை உருவாக்குவார். எடுத்த காரியத்தை செய்யும் போது எதுசரி, எதுதவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டா லும்  திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள்.  சுக்கிரன் ராசிக்கு 3ல் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதை யில்  செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட் களை வாங்கி கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு: மிக கவனமாக பேசுவ தும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.  

சந்திராஷ்டமம்: இல்லை 

பரிகாரம்: சீர்காழி அருகே உள்ள திருநாங்கூர்  புருஷோத்தம பெருமாளை யும், தாயார் புருஷோத்தம நாயகியையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்விய றிவு பெருகும்.

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், சம், ஆயில்யம்)

மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணமுடைய கடகராசியினரே, நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். இந்த வாரம் ராசியில் சஞ்சரித்த சுக்கிரன், ராசிக்கு இரண்டில் சஞ்சாரம் செய்வதால் பணம் வருவது அதிகரிக் கும்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற் கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங் கள் சாதகமான பலன் தரும். ராசிக்கு மூன்றில் சூரியன் சஞ்சரிக்கும் போது மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறு வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்தி கரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  இடமாற்றம் உண்டா கலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டா கும். நீண்ட நாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக் கிடையே  அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும்.    

பெண்களுக்கு:  அடுத்தவர்கள்  பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். 

மாணவர்களுக்கு:  பாடங்களை படிப்ப தில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர் பான  பயணங்கள் செல்ல நேரிடலாம்.  

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும். 

சிம்மம்
(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்மராசியினரே இந்த வாரம் சுக்கிரன், ராசியாதிபதி சூரியன் சஞ்சாரம் ராசி மற்றும் ராசிக்கு இரண்டில் இருப்பதால் திடீர் கோபம் ஏற்படலாம். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின்  காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை.  உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கை யாளர்களை அனுசரித்து நிதானமாக  பேசுவது நன்மை தரும்.  கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிக ளுடன்  கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்திற்கு தேவையான பொருட் களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக் கிடையே கருத்து வேற்றுமை உண்டாக லாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டா மல் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு:  திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். 

மாணவர்களுக்கு:  சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  கல்வி யில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.   

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்:  பிரதோஷ காலத்தில் சிவ பெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டா கும். குழப்பம் தீரும்.

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல் பட்டு வெற்றி பெறும் கன்னி ராசியினரே இந்த வாரம் ராசியில் சூரியன் சஞ்சாரம் இருப்பதால் கெட்ட கனவுகள் உண்டாக லாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமத மாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர் களிடம் மனஸ் தாபம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு கள் உண்டாகும். பணவசூல் தாமதப் படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம்.  

பெண்களுக்கு:  எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவ தில் கவனம் தேவை. பணவரத்து தாமதப் படும்.

மாணவர்களுக்கு:  எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை  சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்:  இல்லை

பரிகாரம்:  திருவிடந்தை (சென்னைக்கு அருகே உள்ளது). லட்சுமி வராஹப் பெருமாளையும், கோமளவல்லி தாயாரை யும் வணங்க திருமண தடை நீங்கும். செல்வம் சேரும்.

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆலோசனை கூற தயங்காத துலாராசியினரே இந்த வாரம் சூரியன், சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணம்வரத்து அதிகரிக்கும்.  துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுத லாக உழைப்பதன் பேரில்  கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய் வார்கள். கணவன் மனைவிக் கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங் கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். 

பெண்களுக்கு: தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். 

மாணவர்களுக்கு:  கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும். 

சந்திராஷ்டமம்:  இல்லை

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வணங்குவது சுபிட்சத்தை தரும். இல்லறத்தில்  இருந்த சச்சரவு தீரும்.

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், னுஷம், கேட்டை)

எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளக் கூடிய விருச்சிகராசியினரே இந்த வாரம் சூரியன், சுக்கிரன் மாற்றத் தால் பலவிதத்திலும் பணவரத்து உண்டா கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்கு களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சி யான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக் கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்பட லாம்.  அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது.  பிள்ளை களை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. 

பெண்களுக்கு:  தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு:  பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 

சந்திராஷ்டமம்:   13.9.2009 மற்றும் 14.9.2009 அன்று மாலை 4.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை.

பரிகாரம்:  மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமையில் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.

தனுசு
(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

எப்போதும் உற்சாகமாக இருக்கும் தனுசு ராசியினரே நீங்கள் உங்களுடன் பழகுபவர்களும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று  விரும்புவீர்கள்.  இந்த வாரம் ராசிக்கு 10ல் சூரியன் சஞ்சாரம் இருப்பதால் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 9ல்  இருப்பதால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 

தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை  அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத் தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள்  விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். 

பெண்களுக்கு: இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். 

மாணவர்களுக்கு: சகமாணவர்களை  அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்:   14.9.2009 மாலை 4.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 16.9.2009 இரவு 7 மணி வரை சந்திராஷ்ட மம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் அலைச்சல் காரிய தடை ஏற்படலாம்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவதால் பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதை நிதானமாக செய்து  வெற்றி பெறும் மகரராசியினரே. இந்த வாரம் சாதகமான சுக்கிரன் சஞ்சாரத்தால் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருக்கும் இந்த நேரத்தில் தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தி யோகத்தில்  இருப்பவர்கள் நம்பிக் கையு டன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடை வார்கள். அலுவலக பணிக ளில் தாமதம் ஏற்படலாம்.

குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப் படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். 

பெண்களுக்கு:  எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கை யுடன்  செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.

மாணவர்களுக்கு:  கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

சந்திராஷ்டமம்: 16.9.2009 இரவு 7 மணி முதல் 18.9.2009 இரவு 10.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் விவகாரங்களை  தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம்.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமை யில் வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கும்ப ராசியினரே இந்த வாரம் ராசிக்கு எட்டில் சூரியன் சஞ்சாரம் இருப் பதால் எடுத்த காரியங்களை  செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை.   சுக்கிரன் சஞ்சாரத்தால் அலைச் சலை சந்திக்க நேரிடும்.  பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத் திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர் கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில்
இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக் கிடையே  மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம்.  பிள்ளைகளின் செயல் பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.

பெண்களுக்கு: மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை.

மாணவர்களுக்கு: மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது.  விளையாட்டு  போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்:   18.9.2009 இரவு 10.10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 19.9.2009 அன்று முழுவதும் இருப்பதால் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம்.  எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பரிகாரம்:  விநாயக பெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வணங்கு வதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எந்த காரியத்தை எப்படி செய்ய வேண் டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுக்க தெரிந்த மீனராசியினரே, இந்த வாரம் சூரியன், சுக்கிரன், பெயர்ச்சி யால் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனை களில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக் காக அலைய வேண்டி வரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களை அனு சரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும்.   

பெண்களுக்கு:  பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப் படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. 

மாணவர்களுக்கு:  கல்வி தொடர்பான விஷயங்களுக்காக  அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: வடலூர் ராமலிங்க சுவாமி களை வணங்கி வர மன அமைதி உண்டா கும். நன்மை ஏற்படும்.

.
| |

மற்றவை :