ஜெயம்ரவி அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கியதோடு, அவர்கள் கேட்ட கேள்விக்கு சைகை மூலமே பதிலளித்திருக்கிறார். உங்கள் எதிர்கால லட்சியம் என்ன என்று ஒரு சிறுமி கேட்டதற்கு, எல்லா பாத்திரங்களையும் சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகனாக வர வேண்டும் என்று அவர் கை அசைவுகள் மூலமே பதில் தந்திருக்கிறார். தந்தை எடிட்டர் மோகன், தாயார் வரலட்சுமி, சகோதரர் ராஜா, மனைவி ஆர்த்தி என தனது குடும்பத்தினர் அனைவரும் உடனிருந்தனர்.
தனது சகோதரரோடு இணைந்து பணியாற்றும் 5-வது படமான தில்லாலங்கடி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெயம்ரவி, தான் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கும் பேராண்மை படத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருப்பதாக கூறினார். |