கூல் புரொடக்ஷன்ஸ் சார்பில் அவர் இயக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்க, ப்ரியாமணி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சரண்யா மோகன் சகோதரி வேடத்தில் நடித்திருக்கிறார். அண்ணாமலை, பாட்ஷா ஆகிய படங்களில் சுரேஷ்கிருஷ்ணாவோடு இணைந்த தேவா இசையமைத்துள்ளார்.
படையப்பாவில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன், பரத்துக்கு சாவல்விடும் தொழிலதிபர் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக சஹாரா பாலைவனத்தில் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனராம். பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. |