Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நாயகனாகும் இயக்குனர்
 
.
Sunday, 13 September, 2009 09:54 AM
.

 கொஞ்ச நாட்களுக்கு இயக்கமே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த ஏ.எம். ஜோதி கிருஷ்ணா தற்போது ஊ...ல...ல...லா. என்று உற்சாகமாக பாடிக் கொண்டிருக்கிறார். ஊ...ல...ல...லா. அதுதான்  அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் பெயர். மும்பையைச் சேர்ந்த புதுமுகம் ப்ரீத்தி பண்டாரி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜோதி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்.

.
(நடிகராகும் அடுத்த இயக்குனர்)  இளவட்டங்களை மையமாக கொண்ட கதைக்கு  பொருத்தமான புதுமுகத்தை தேடிக் கொண்டிருந்த போது தயாரிப்பாளரும், இன்னும் சில நண்பர்களும் நீங்களே நாயகனாக நடிக்கலாம் என்று வற்புறுத்தியதால் ஜோதி கிருஷ்ணாவும் அதை ஏற்று கொண்டு நாயகனாகி விட்டாராம்.  ஏக் சக்ரா மீடியா லிமிடெட் சார்பில் கலைச்செல்வம் படத்தை தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஜாலியான படமாக  இது இருக்கும் என்று கூறுகிறார் ஜோதி கிருஷ்ணா. அதென்ன தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது என்று கேட்டால், கதைப்படி நாயகன் காதலிக்க கேர்ள்பிரண்ட் கிடைக்காமல் 10 இளம் பெண்களின் பின் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், 10 பெண்களின் பெயரையும் தலைப்பில் வைக்க முடியாது என்பதால் ஊர்வசி, உஷா, லதா, லாவண்யா என 4 அழகிகளின் பெயர்களை தலைப்பாக்கி விட்டதாக உற்சாகமாக சொல்கிறார்.

இக்கால இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமல்ல; இக்கால பெற்றோர்களின் உணர்வுகளும் எப்படி இருக்கின்றன என்பதை படம் உணர்த்துமாம். படத்தின் கதை மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் ஆர்.ஜி. சேகர் உள்பட படப்பிடிப்பு குழுவினரும், இளைஞர்கள் தானாம். தலைவாசல் விஜய், ஓபோடு ராணி, கஞ்கா கறுப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள  இந்த படத்திற்கு சேகர் சந்திரா மற்றும் வி.குமார் இசையமைத்துள்ளனர்.
| |

மற்றவை :