இவர்களது குடும்பம் ஒரு கலைக் குடும்பம். தாத்தா மறைந்த சினிமா புகழ் தபேலா குணசேகரன். இவரது தந்தை டிரம்ஸர் பத்மநாபன். தாய் பல்வேறு மேடைகளில் தன் இசை ஞானத்தால் அனைவரையும் கவரக்கூடிய குரல்வளம் பெற்ற திரைப்பட பின்னணி பாடகி. இப்படி இருக்க, இந்த மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவா வேண்டும்?
கோடம்பாக்கம் வன்னியர் தெருவில் மியூசிக் கிளாஸ் நடத்திவரும் டிரம்சர் பத்பநாபன்-ஹெலன் ஸ்வீட்டியின் மகன்தான் மேக்னஸ். இவர் மாலைச்சுடருக்கு அளித்த பேட்டியில், தீபறக்கும் குச்சிகளுடன் டிரம்ஸ் வாசிப்பதில் ஏற்பட்ட ஆர்வம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வேன். என் தந்தை டிரம்ஸ் மாஸ்டர். என் தாய் பாடகி என்பதால் நானும் டிரம்ஸ் வாசிக்க கற்றுக்கொண்டேன். 2 வயதிலிருந்து தந்தை நடத்தி வரும் மியூசிக் கிளாசில் டிரம்ஸ் பயிற்சி பெற்றேன். இப்போது மேடைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு டிரம்ஸ் வாசித்து வருகிறேன்.
பக்தி பாடல்கள், லைட் மியூசிக், கர்நாட்டிக், பியூஷன் குரூப் போன்றவைகளுக்கு வாசிப்பேன். பாரதி மாஸ்டர் மற்றும் கடுக்கன் பாபு மாஸ்டரிடம் எலெக்ட்ரானிக் ட்ரம்ஸ் , கான்செட் டிரம்ஸ் போன்றவைகளை கற்றுகொண்டேன். 6வயதில் முதன் முதலில் கோயிலில் தனியாக 7 நிமிடத்தில் சோலோ வாசித்தேன்.அனைவரும் என்னை பாராட்டினர். தினமும்வீட்டில் பயிற்சி பெறுவதால் மேடையில் ஏறி வாசிக்கும்போது எனக்கு பயம் தெரிவதில்லை.
பள்ளிகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் சென்று டிரம்ஸ் வாசிப்பேன். அனைத்து ஆசிரியர்களும் பார்வையாளர்களும் என்னை பாராட்டி வாழ்த்துவார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இதுவரை 300 க்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளில் பெற்றோருடனும், தனியாகவும், வாசித்து வருகிறேன். வேறு குரூப்பில் இருந்தும் அழைத்துசெல்வார்கள் .
மாஸ்டர் கடுக்கன் பாபு ஒரு கச்சேரியில் வித்தியாசமாக வாசித்தது என்னை கவர்ந்தது. அதைபார்த்ததும் எனக்கும் அவர் போல் வாசிக்க வேண்டும் என்று என் தந்தையிடம் கூறினேன். தந்தையே கற்று கொடுத்தது தான் டிரம்ஸ் குச்சிகளில் தீபறக்க டிரம்ஸ் வாசிப்பது.
சிம்பல் இரண்டிலும் சொலிசன் மூலமும் இரண்டு குச்சிகளிலும் கெரசின் ஊற்றி பற்ற வைத்து அனல் வீச-, 7 நிமிடங்கள் சோலோ வாசிப்பது மேக்னசின் தனித்துவம். இதனால் எனது கையில் தீக்காயம் ஏற்பட்டது. சாதிக்க வேண்டும் என்றால் எந்த காயமும் கண்களுக்கு தெரியாது. இது எல்லாம் சாதாரணம்.
பார்வையாளர்களின் கைத்தட்டலால் தொடர்ந்து வாசிக்கும்எண்ணம் தான் தோன்றுமே தவிர-, நிறுத்துவதற்கு மனம் வராது. எனக்கு பிடித்தவர் டிரம்ஸர் சிவமணி சார்தான் எனக்கு ரோல் மாடல். அவர் முன்பு வாசிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அது மட்டுமல்லாமல், தாத்தா, தந்தையை விட சற்று வித்தியாசமாக இந்திய தாளத்தையும், மேற்கத்திய தாளத்தையும் கலந்து வாசித்து என் தாய்வழியில் இசையிலும் சாதித்து உலக புகழ் பெறவேண்டும். அது மட்டுமல்ல, படித்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று டிரம்சில் இசையை எழுப்புவது போல தன் அனுபவத்தை அவன் கொட்டினான். படிப்பிலும் சுட்டியான மேக்னஸ் டிரம்ஸ் வித்தியாசமாக வாசிப்பதை பார்த்து வியப்படைந்து வாழ்த்தி விட்டு விடைபெற்றோம். நேர்காணல்: ஆர்.சுசீலா |