மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி வழியே தேனி செல்லும் பேருந்தில் கதை நடப்பதாக சொல்லும் அவர், இந்த பயணத்தின் போது நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே காதல் மலர்வதாகவும் அந்த காதலை சுவையாக சித்தரித்திருப்பதாகவும் கூறுகிறார்.
விமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அரவிந்த் வினோத் நாயகனாகவும், வெண்ணிலா கபடி குழுவில் நடித்த ஸ்ரீதிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜே.வி. இசையமைத்துள்ளார்.
இதுவரை கத்தியும், அரிவாளுமாக காட்டப்பட்ட மதுரை மாநகர் இந்த படத்தில் அதற்கே உரிய அழகில் காட்டப்பட்டுள்ளதாம். படத்தில் பேருந்தும் கதையில் முக்கிய அங்கம் வகிக்கிறதாம்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர்கள் சேரன், பாண்டியராஜ், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |