
"பவானி' படத்தின் எதிர்பார்ப்பு சிநேகாவை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறதாம். கிச்சா இயக்கும் இந்த படத்தில் சிநேகா தன்னுடைய மென்மையான பாணியில் இருந்து விலகி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள இந்தப் படம் விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டா போட்டியை உண்டாக்கி இருக்கிறதாம்.