மகாபாரதத்தில் "ஆறாவது வனம்' அத்தியாயம், வனவாசம் மேற் கொள்ளும் பாண்டவர்கள் அரக்கர் களையும், ராட்சசர்களையும் எப்படி அழித்து வெற்றி பெறுகின்றனர் என்பதை விவரிக்கிறது. அது போலவே காதலர்கள் சந்திக்கும் சோதனைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை படத்தின் கதை விவரிக்கிறதாம்.
காதலர்களாக புதுமுகங்கள் பூஷன்குமார் மற்றும் வித்யா நடித்துள்ளனர். எஸ்.எம்.தியாகராஜன் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவாவிடம் உதவியாளராக இருந்த ஹரிபாபு இசையமைத்துள்ளார். கதைக்கேற்ற இனிமையான இசை படத்தின் சிறப்பம்சமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் புவனேஷ். ஒட்டு மொத்த குழுவினரும் ஈடுபாட்டோடு உழைத்திருப்ப தாகவும் உற்சாகமாக கூறுகிறார். படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. |