அப்படியிருக்க, சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஒரே நாளில் இந்த இரண்டு வேடங்களிலும் ஜீவா நடித்திருக்கிறார். காலையில் சீரியசாக பேசி நடித்த அவர் மாலையில் காமெடியில் கலக்கி விட்டாராம். அவரது மாறுபட்ட நடிப்பை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டியுள்ளார். சில்வர்லைன் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பார்த்திபன், எஸ்.எஸ்.வாசன் தயாரிக்கும் இந்த படத்தில் திவ்யா ஸ்பந்தனாஸ் நாயகியாக நடிக்கிறார். சாய்ரமணி படத்தை இயக்கி வருகிறார்.
தயாரிப்பாளர்கள் பார்த்திபன் மற்றும் வாசன், நாயகன் ஜீவாவின் ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தருவதாக கூறுகின்றனர். சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பாவில் இதுவரை யாரும் படமாக்காத நாடுகளிலும் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனராம். இப்போது ஐதராபாத், விசாகப் பட்டினம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. |