Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
இது இந்திய டைட்டானிக்
 
.
Sunday, 30 August, 2009 03:18 PM
.
சூரியன், ஜென்டில்மேன், காதலன் என பல வெற்றிப்படங்களை கொடுத்த கே.டி.குஞ்சுமோன் சிறிது இடைவேளைக்குப்பிறகு ஏ.ஆர்.எஸ். மூவிஸ் மூலம் தயாரித்துள்ள படம் "காதலுக்கு மரணம் இல்லை'.
ஷங்கர், பவித்ரன் என பல முன்னணி இயக்குனர்களை அறிமுகப்படுத்திய குஞ்சுமோன், இந்த படத்தில் சி.பாலாஜி என்பவரை இயக்குனராக அறிமுகம் செய்கிறார்.
.
பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான தேஜா என்ற புதுமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வால்மீகி பட நாயகி மீரா நந்தன் மற்றும் மடாலிசா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.  மடாலிசா மும்பையைச் சேர்ந்தவர். கருணாஸ், சுகாசினி, சரண்ராஜ், அலெக்ஸ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கே.டி.குஞ்சுமோன் படத்தை தயாரித்திருப்பதோடு கதை, வசனத்தையும் எழுதி உள்ளார். பல வெற்றிப்படங்களை கொடுத்த நான், மீண்டும் வலுவான கதையோடு வந்திருக்கிறேன் என்று குஞ்சுமோன் நம்பிக்கையோடு கூறுகிறார்.
காமெடி, ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்து முக்கோண காதல் கதை என்றாலும் திரைக்கதை மிகவும் வித்தியாகமாக அமைந்திருப்பதாகவும், அதை விட சூப்பராக கிளைமாக்ஸ் அமைந்திருப்பதாகவும் அவர் உற்சாகமாக சொல்கிறார். இந்திய டைட்டானிக் என்று சொல்லக்கூடிய வகையில் படத்தின் கிளைமாக்ஸ் பரபரப்பாக இருப்பதாகவும், இதற்காகவே ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என்றும் குஞ்சுமோன் சொல்கிறார்.

இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை கிளைமாக்ஸ் சிந்திக்க வைக்கும் என்றும் கூறுகிறார்.
பரத்வாஜ் இசையில் வாலி மற்றும் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளனர். இந்த படத்தை, தமிழ் தவிர தெலுங்கிலும், இந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
| |

மற்றவை :