திரைவண்ணன் இயக்கும் இந்த படத்தில் பூனம் பாஜ்வா, ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். காதல், காமெடி என்று மிகவும் ஜாலியான படம் இது என்கிறார் இயக்குனர். இந்த படத்தில் முதல் முறையாக வடிவேலுவுடன் ஜீவா இணைந்து நடிக்கிறார். கதைப்படி கிராமத் திலிருந்து வேலை தேடி வரும் ஜீவா, பர்மாபஜாரில் கடை வைத்திருக்கும் வடிவேலுவிடம் வேலைக்கு சேருகிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.
இந்த காட்சிகளை பர்மா பஜாரிலேயே படமாக்க நினைத்து பின்னர், 25 லட்சம் செலவில் செட் போட்டு படமாக்கி உள்ளனர். படத்தில் தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி வில்லனாக நடித்திருக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். |