தொழில் வியாபாரம் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து வரும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் அலுவலக வேலை தொடர்பாக பயணம் செல்ல நேரலாம். வார இறுதியில் அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் சுமூக மானநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனகசப்பு மாறும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.
பெண்களுக்கு: தேவையான நேரங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த தேக்க நிலை மாறி ஆர்வமுடன் சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: கார்த்திகை அன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர தடை பட்ட காரியங்களில் தடைநீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) அழகாக அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வமும் சகிப்பு தன்மையும் உடைய ரிஷப ராசியினரே இந்த வாரம் மரியாதை யும், அந்தஸ்தும் கூடும். சந்திரன் சஞ்சாரத்தால் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். செவ்வாயின் சஞ்சாரம் ராசிக்கு இரண்டில் இருப்பதால் திடீர் கோபம் வரலாம். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் மனோ தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதை யில் செல்லும். எந்த சிக்கலும் வராமல் இருக்க தீர ஆலோசனை செய்து முடிவு கள் எடுப்பீர்கள். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் திறமை வெளிப்பட்டு அதனால் பாராட்டும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
பெண்களுக்கு: கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் நிதானமாக பேசுவது பிரச்சனை வராமல் தடுக்கும். மனோபலம் கூடும்.
மாணவர்களுக்கு: கூடுதல் மதிப்பெண் பெற்று கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்தரும். திறமை வெளிப்படும்.
சந்திராஷ்டமம்: 30.8.2009 அன்று முழுவதும் 31.8.2009 அன்று இரவு 11.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல், காரியதாமதம் ஏற்படலாம். கவனம் தேவை.
பரிகாரம்: குலதெய்வத்தை பூஜை போட்டு வணங்க பிரச்சனைகள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) அறிந்தவர், அறியாதவர் என்று இல்லா மல் யாருடனும் எளிதாக பழகும் குண முடைய மிதுனராசியினரே, இந்தவாரம் மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். சந்திரன் சஞ்சாரத்தால் வார தொடக்கத்தில் தடை, தாமதம் ஏற்பட்டாலும் வார இறுதியில் எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். பயணங்கள் செல்ல நேரலாம். அடுத்தவர் களுக்கு நன்மை செய்யும் போது கவனமாக இருப்பது வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வார இறுதியில் வசூலாக லாம். மேலும் புதிய ஆர்டர்கள் வருவது, புதிய வாடிக்கையாளர்கள் வருவதும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் வேலை பளு இல்லாதது போல் தோன்றினாலும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக் கிடையே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகள் உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு: தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர்கள் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனகுழப்பம் நீங்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி, பாடங்களை நம்பிக்கை யுடன் படிப்பீர்கள். சகமாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 31.8.2009 இரவு 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 03.09.2009 பகல் 11 மணி வரை இருப்ப தால் தடைதாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். எச்சரிக்கை யாக இருப்பது நல்லது.
பரிகாரம்: சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோயிலுக்கு சென்று ஸ்ரீஅண்ணன் பெருமானையும் தாயார் பூவாரி திருமகளையும் வணங்க தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் விலகும். நன்மை உண்டாகும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) அன்பும், கருணையும் கொண்ட கடக ராசியினரே நீங்கள் மனோதிடம் மிக்கவர். எளிதில் எதையும் நம்பமாட்டீர்கள். இந்த வாரம் ராசியாதிபதி சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வார மத்தியில் அலைச்சல் இருக்கும். எதிர் பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். அதனால் செலவும் ஏற்படும். சரக்குகளை வாடிக்கை யாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வழக்கத்தை விட பணிசுமை கூடும். குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணிகளை கவனிப்பது நல்லது.
குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனை கள் தீரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கி டையே அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர் கள். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
பெண்களுக்கு: பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்க ளால் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு: கவனத்தை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பதால் நன்மை உண்டாகும். மதிப் பெண் கூடும்.
சந்திராஷ்டமம்: 03.09.2009 பகல் 11 மணி முதல் 05.09.2009 இரவு 9.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீநாகாத்தம்மனுக்கு பூஜை செய்து வணங்க எல்லா தடைகளும் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்பு கள் நீங்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு தலைமை தாங்கி நடத்தும் திறமை உடைய சிம்மராசியினரே, இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். சந்திரன் சஞ்சாரத்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். வார இறுதியில் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். ராசியில் சஞ்சாரம் செய்யும் சூரியன், சனி வக்கிரம் பெற்ற புதனால் மனக்கவலை ஏற்படலாம்.
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செய்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். பிள்ளை களிடம் மென்மையாக நடந்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு: எந்த காரியத்தையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும், நந்தீஸ்வரரையும் வணங்க குடும்ப பிரச்சனை தீரும். எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய கன்னிராசியினரே, இந்த வாரம் அதிக உழைப்பும், அதற்கேற்ற ஆதாயமும் இருக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையாக செயல் பட்டாலும் காரிய தாமதம் உண்டாகும். வார மத்தியில் பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உறவினர் நண்பர் கள் மூலம் கிடைக்கும். வார இறுதியில் வாக்கு சாதூரியத்தால் நன்மை கிடைக் கும். ராசியாதிபதி சூரியன் ராசியில் சனி, வக்கிரம் பெற்ற புதனுடன் சஞ்சாரம் செய்வதால் எதையும் யோசித்து செய்வீர் கள். பயணம் மூலம் சாதகம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்திற்கு தேவையான நிதி வசதி பெருகும். வியாபார வளர்ச் சிக்கு தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்பு கள் வரும்.
குடும்பத்தில் உங்களது மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையில் மகிழ்ச்சி யான நிலை இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களின் அன்பை பெறுவீர்கள்.
பெண்களுக்கு: எதையும் யோசித்து செய்வது நன்மைதரும். பயணங் களினால் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் அடைய வாய்ப்புகள் கிடைக்கும். சக மாணவர்களிடையே மதிப்பு உயரும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: கோவை அருகே உள்ள காரமடை அரங்கநாதர் ஆலயத்தில் அரங்கநாதரை சேவித்து வர மன நிம்மதி கிடைக்கும். பணகஷ்டம் குறையும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) நீதி, நியாயமாக பேசினாலும் பிடிவாத குணமும் கொண்ட துலாராசியினரே இந்த வாரம் காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். சந்திரன் சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் ஒரு பயம் உண்டாகும். தூக்கம் குறையும். மற்றவர்களிடம் பகை ஏற்படாவண்ணம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. பணவரத்து அதிகரிக் கும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் கேதுவுடன் இணைந்து இருப்பது தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தும்.
தொழில், வியாபாரம் மந்தமாக இருக் கும். பொருளாதார திட்டங்களில் அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து செய் வது நல்லது. வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவன மாக பணிகளை கவனிப்பது நல்லது. எந்திரங்களை இயக்கும் போதும் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக் கிடையில் சில்லறை சண்டைகள் ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் கூறியபடி நடக்கவில்லையே என்ற கவலை உங்களுக்கு ஏற்படலாம்.
பெண்களுக்கு: பணவரத்து கூடும். எதிர்பார்த்த தகவல் தாமதமாக வரும். ஏதாவது கவலை மனதில் இருக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பாடங்களில் சந்தேகம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எலு மிச்சை தீபம் ஏற்றி வணங்க மனகவலை நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை) நளினம் நயவஞ்சகம் ஏதும் அறியாத விருச்சிக ராசியினரே நீங்கள் எதையும் வெளிப்படையாக பேசுபவர். இந்த வாரம் மனதில் தைரியம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். வார மத்தியில் வீண் அலைச்சல் அத னால் கண்விழிக்கும் நிலை ஏற்படலாம். வார இறுதியில் எதிர்பாராத செலவு வரலாம். ராசியாதிபதி செவ்வாய் சஞ் சாரத்தால் நிர்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். அடுத்தவர்கள் விவகாரத்தில் ஈடுபடுவதால் சிக்கல் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும். உற்சாகமாக செயல் பட்டு புதிய வாடிக்கையாளர் களை பிடிப்பீர்கள். அதே நேரத்தில் போட்டியும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் கள் அலுவலக பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவார் கள். கடன் விஷயத்தில் கவனம் தேவை.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் மறைமுகமாக சில பிரச்சனைகள் தோன்றும். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் அனு சரித்து செல்வது நன்மை தரும். பிள்ளை கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது.
பெண்களுக்கு: திடீர் செலவு உண்டா கும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்ட மிட்டு செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு: உற்சாகமாக செயல் பட்டு பாடங்களை படிப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதில் முழுகவனத்தையும் செலுத்தி செயல்படும் தனுசு ராசியினரே இந்த வாரம் காரியதாமதம், அதனால் மனக் கவலை ஏற்படலாம். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் வீண் வாக்கு வாதங் களை உண்டாக்கும். அதனால் அடுத்த வரின் பகைக்கு ஆளாக நேரிட லாம். வார மத்தியிலும் வார இறுதியில் பணவரத்து அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக் கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தடையும்,தாமதமும் ஏற் படலாம். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்தால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சை கட்டுப்படுத்தி கருத்து வேற்றுமை வராமல் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்க வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் நேசமுடன் பேசுவது அவர்கள் கருத்தை அறிந்து செயல்படுவது நன்மைதரும்.
பெண்களுக்கு: வீண் வாக்குவாதங் களை தவிர்த்து அமைதியாக பேசுவது நல்லது. பணவரத்து திருப்திதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான கடிதப்போக்குவரத்து சாதகமாக பலன் தரும். சகமாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: வடலூர் ராமலிங்க அடிக ளாரை வணங்கி வருவதால் நல்ல சிந்தனை உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கண்டிப்பும், கட்டுப்பாடும் நிறைந்த மகர ராசியினரே நீங்கள் எதிர்கால திட்டங் களில் கவனம் செலுத்துவதில் முக்கியத்து வம் அளிப்பவர். இந்த வாரம் புத்தி சாதூரியத்தால் காரிய நன்மைகள் உண் டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் பணவரவு கூடும். பயணங்களால் நன்மை உண்டா கும். வார மத்தியில் வீணான பயஉணர்வு தோன்றும். வார இறுதியில் மனநிம்மதி உண்டாகும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். ராசியாதிபதி சனி, சூரியன், வக்கிர புதனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. அடுத்தவர் கூறுவதை முழுமை யாக நம்பும்முன் யோசிப்பது நல்லது. உழைப்பின் மூலம் தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். தடை பட்ட திட்டங்கள் நிறைவேறும். எதிலும் மெத்தனம், பிடிவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.
குடும்பத்தில் நிதானமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக்கிடை யில் அன்பு அதிகரிக்கும். ஒருவரது கருத்தை மற்றவர் கேட்பது நல்லது. பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படு வார்கள். அவர்களுடன் கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு: முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பீர் கள். பிடிவாதத்தை விடுவது நன்மைதரும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைப்பது வீண் உழைப்பு குறை யும். காரிய தடை நீங்கும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) எப்போதும் துடிப்பாக சுதந்திரமாக செயல்பட விரும்பும் கும்பராசியினரே இந்த வாரம் வீண் செலவு ஏற்படலாம். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் கோபத்தால் வீண் பிரச்சனையை ஏற் படுத்தும். வார மத்தியிலும், இறுதியிலும் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. காரிய தாமதம் ஏற் படும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக் கும். ராசியாதிபதி சனி சஞ்சாரம் 7ல் சூரியன், வக்கிர புதனுடன் சேர்ந்து இருப்ப தால் குறிக்கோளற்ற பயணம் செல்ல வேண்டி இருக்கும். விருப்பத்திற்கு மாறாக சில விஷயங்கள் நடக்கலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். பார்ட்னர்களிடம் கவனமாக பேசி வியாபாரத்தை கொண்டு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப் பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுப்பது நல்லது. பிள்ளைகள் உடல் நலனில் கவனம் தேவை.
பெண்களுக்கு: கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். வீண் அலைச்சல் எதிர் பாராத செலவு இருக்கும்.
மாணவர்களுக்கு: எதிர்காலம் பற்றிய குறிக்கோளுடன் திட்டமிட்டு கல்வியை கற்பது நன்மை தரும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபட எல்லா தடைகளும் நீங்கும். கல்வியில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றமடையும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) காலத்தை வீணாக்காமல் எதையும் உரிய நேரத்தில் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் மீனராசி யினரே இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். வார மத்தியிலும், இறுதியிலும் பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். ராசியாதிபதி குரு ராகுவுடன் சேர்ந்து இருப்பதும் 11ல் சஞ்சாரம் செய்வதும் வாகன யோகத்தை தரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் தாமதமானாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்ப வர்களின் செயல்திறமை வெளிபடும். புதிய வேலை தேடுபவர் களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோ சனைபடி பிள்ளைகள் செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும். கணவன், மனை விக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு: அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். மாணவர்களுக்கு: பாடங்களை ஆர்வ முடன் படிப்பீர்கள். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மஞ்சள் வஸ்திரம் சாற்றி கொண்டகடலை சுண்டல் நைவேதியம் செய்து நெய்தீபம் ஏற்றி குருபகவானை வணங்குவதால் பணவரத்து கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். மனஅமைதி கிடைக்கும். |