* இப்போதெல்லாம் பாடல் சிடிகளை தியேட்டரில் வெளி யிடுகின்றனர். படத்தை சிடியில் வெளியிட்டு விடுகின்றனர் என்று நடிகர் விவேக் நகைச் சுவையாக குறிப்பிட்டார்.
* விழாவில் பேசிய அனைவரும் உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறந்த தயாரிப்பாளர் என்று பாராட்டு தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, அனைவரும் ரவிக்குமாரை தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று பாராட்டுவதை குறிப் பிட்டு விட்டு இந்த படத்தை பொறுத்த வரை தயாரிப்பாளர் இயக்குனர் என்று சொல்லும் அளவுக்கு தயாரிப்பு வேலை களையும் கவனித்துக் கொண்ட தாக தெரிவித்தார்.
* நிகழ்ச்சியில் 2 பாடல்கள் திரை யிடப்பட்டன. பின்னர் பேசிய சூர்யா, பாடல் காட்சியை பார்த்த போது நாம் நடனமாடுவதை விஜய் பார்த்துக் கொண்டிருக் கிறாரே என்று நினைத்து பயந்த தாக தெரிவித்தார்.
* ஹாரிஸ் ஜெயராஜின் மெல்லிசை பாடல்களுக்கு தான் அடிமை என்று நடிகர் விஜய் குறிப்பிட்டார். |