Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சூர்யாவை பாராட்டிய விஜய்
 
.
Thursday, 20 August, 2009 11:41 AM
.
சென்னை, ஆக.20: டாப் கியரில் சென்று கொண்டி ருக்கும் நாயகன் என்று சூர்யாவை நடிகர் விஜய் பாராட்டினார். ஆதவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் இவ்வாறு கூறினார்.
.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் "ஆதவன்'.
சூர்யா, நயன்தாரா ஜோடியாக நடிக்க வடிவேலு, சரோஜா தேவி, அனுஹாசன், ஆனந்த்பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் படத்தின் ஆடியோ சிடியை வெளியிட,  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் பெற்றுக் கொண்டார். டிரைலரை ஆர்.பி.சௌத்ரி வெளியிட, நடிகர் விஜய் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும் போது, தமிழ் திரையுலகில் டாப் கியரில் இருக்கும் ஹீரோ சூர்யா என்று குறிப்பிட்டார். படத்திற்கு படம் சூர்யா தனது நடிப்பில் வித்தியாசம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இயக்குனர் சங்கர் பேசும் போது, சூர்யாவின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருவதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இந்த படம் வழக்கமான பொழுதுபோக்கு படமாக இருக்காது என்றும், சின்ன சின்ன விஷயங்களை யோசித்து செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நன்றியுரை கூறினார். இயக்குனர்கள் தரணி, கே.வி. ஆனந்த், கௌதம் மேனன், அமிர்தம், ரமேஷ் கண்ணா, இசை யமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அபிராமி ராமநாதன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
| |

மற்றவை :