சென்னையில் 18 தியேட்டர்களில் படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு கடந்த 16ந் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளன்று 1,46,976 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.95,22,498 ரூபாய் வசூலாகியுள்ளது.
இந்த தகவலை அபிராமி திரையரங்கின் உரிமையாளரும், படத்தின் சென்னை நகருக்கான விற்பனை உரிமையை பெற்றுள்ளவருமான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் இவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகி யிருப்பது இதுவரை இல்லாத சாதனை என்று அவர் கூறியுள்ளார்.
முன்பதிவு செய்வதற்கு ரசிகர்கள் காட்டி வரும் ஆர்வம் இந்த படம் ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்கு சான்றாக விளங்குவதாக அவர் கூறியுள்ளார். |