Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தமன்னாவின் ரசிகன்
 
.
Wednesday, 19 August, 2009 02:52 PM
.
 சென்னை, ஆக.19: நான் தமன்னாவின் ரசிகன் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார். "தில்லாலங்கடி' படத்தின் துவக்க விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி இவ்வாறு கூறினார். எடிட்டர் மோகன் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் படம் தில்லாலங்கடி. தெலுங்கில் சூப்பர்ஹிட்டான கிக் படத்தை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார்.
.
இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. ஏவிஎம் ஸ்டுடியோவில் ல் நடைபெற்ற படத்தின் பூஜைக்கு பிறகு முதல் காட்சி படமாக்கப் பட்டது. சிறைச்சாலை போன்ற செட் அமைக்கப்பட்டு முதல் காட்சி  படமாக்கப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர்,  நடிகர் விஜய், ஜெயம் ரவி, தமன்னா,  ராமநாராயணன், இயக்குனர் ஹரி, எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது: தெலுங்கில் சூப்பர்ஹிட்டான படம் இது. ஏற்கனவே நானும், எனது சகோதரரும் இணைந்து இதேபோல தெலுங்கில் ஹிட்டான படங்களை தமிழில் வெற்றிப்படங்களாக கொடுத்திருக்கிறோம். அதுபோல இந்த படமும் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த படத்தின் தமன்னா நாயகியாக நடிக்கிறார். அவர் நல்ல நடிகை. அவரது படங்களை நான் பார்த்திருக்கிறேன். நான் அவரது ரசிகன். அவரோடு நடிப்பது மகிழ்ச்சி
என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகை தமன்னா ஜெயம் ரவியோடு இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தார்.
தெலுங்கில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ஷாம் இந்த படத்தில் நடிக்கிறார்.  அவர் பேசும்போது, இயக்குனர் ராஜாவை நம்பி இந்த படத்தில் தன்னை ஒப்படைத்திருப்ப தாக தெரிவித்தார்.
| |

மற்றவை :