
பட்டியல் சேகர், செகக் கபூர் தயாரிக்கும் படம் கற்றது களவு. பாலாஜி டி இயக்கும் இந்த படத்தில் அலிபாபா படத்தில் நடித்த கிருஷ்ணா நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக விஜயலட்சுமியும் நடிக்கின்றனர்.அலிபாபாவைப் போலவே இந்த படத்திலும் கிருஷ்ணாவுக்கு ஆக்ஷன் வேடம் தான். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்ட நிலையில், சமீபத்தில் ஆந்திரா அருகே உள்ள ஒரு தீவில் படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி உள்ளனர்.