தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக் கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற் பட்ட சிக்கல்கள் வார இறுதியில் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வார இறுதியில் கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்து ழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் வார இறுதியில் தீரும். கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள்.
பெண்களுக்கு: பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.
சந்திராஷ்டமம்: இல்லை பரிகாரம்: வெள்ளி, செவ்வாய் கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று காரிய வெற்றி காணும் ரிஷபராசியினரே இந்த வாரம் சூரியன் சஞ்சாரம் ராசிக்கு நான்கில் இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர் களுடன் பகை ஏற்படலாம். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு மூன்றில் வார இறுதியில் தொடங் குவதால் சாமர்த்தியமாக எதையும் சமாளிக் கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். வார இறுதியில் தெளிவான நிலை ஏற்படும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கை கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனு சரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை.
பெண்களுக்கு: எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
மாணவர்களுக்கு: கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்க ளில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கை யில் முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் மிதுன ராசியினரே நீங்கள் சுய கௌரவம் பார்ப்பீர்கள். இந்த வாரம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். ராசிக்கு மூன்றில் சூரியனின் சஞ்சாரம் தொடங்குவ தால் எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரிய மும் சாதகமாக முடியும். விருப்பமானவர்க ளுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் வார இறுதியில் வாக்கு வன்மை யால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப் பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலா கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரி யங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச் சல் குறையும். எதிர் பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தி யமான பேச்சால் எல்லாவற் றையும் சமாளிப்பீர்கள்.
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். பெண்களுக்கு: உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர் கள். கையில் காசு புரளும்.
மாணவர்களுக்கு: கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன் றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சிங்கப்பெருமாள் கோயில் மலைக்கோயில் நரசிங்க ஸ்வாமியை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) அடுத்தவர் பிரச்சனைகளில் தீர்வு சொல்வதில் கெட்டிக்காரரான கடக ராசியி னரே இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். ராசிக்கு இரண்டில் சூரியன் சஞ்சாரம் இருப்பதால் வாக்குவாதம் ஏற் படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல் வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிட லாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக் கும். கடித போக்குவரத்து நன்மை தரும்.
தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.
குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக் கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளை களிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசு வது நல்லது. வாகன வசதி உண்டாகும்.
பெண்களுக்கு: அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவை யாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.
மாணவர்களுக்கு: பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. சகமாணவர்களால் அனுகூலம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சிதம்பரம் தில்லை காளியம் மனை வணங்க அடுத்த வர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கொடுத்த வாக்கை காப்பாற்ற எதை யும் செய்ய தயங்காத சிம்மராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் சஞ் சாரம் ராசியில் இருப்பதால் பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக் கப்படலாம் கவனம் தேவை. கெட்ட கனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பர செலவுகளை ஏற்படுத்தும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப் படும். தேவையான பணஉதவி வார இறுதியில் கிடைக்கலாம். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்கள் சொல் வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளை கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.
பெண்களுக்கு: கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும்.
மாணவர்களுக்கு: பாடங்களை படிப்ப தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) மற்றவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ளும் குணமுடைய கன்னிராசியி னரே இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக் கும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 12ல் தொடங்குவதால் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவை யில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாக லாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமத மாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வார இறுதியில் வரும். உத்தியோகத்தில் இருப் பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர் களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
பெண்களுக்கு: பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.
மாணவர்களுக்கு: நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: கும்பகோணம் ஸ்ரீசாரங்க பாணி பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் ஆர்வம் உள்ள துலாராசியினரே இந்த வாரம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 10ல் இருந்து 11ல் தொடங்குவதால் பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரி யங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் வார இறுதியில் ராசிக்கு 10ல் இருப்ப தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தி னரிடம் அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங் களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகா லட்சுமியை வழிபட்டுவர பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செயல்படும் விருச்சிக ராசியினரே, இந்த வாரம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ராசிக்கு 10ல் சூரியன் சஞ்சா ரம் இருப்பதால் பணம், காசுகள் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல் களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக் கும். வார இறுதியில் சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிக ளில் சாதகமான பலன் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக் கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு: எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
சந்திராஷ்டமம்: 16.08.2009 காலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 18.08.2009 அன்று காலை 8.30 மணி வரை இருப்பதால் தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேதராக உள்ள முருக பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) உல்லாசங்களிலும் கேளிக்கைகளிலும் அதிகநாட்டம் கொண்ட தனுசுராசியினரே இந்த வாரம் மனஉறுதி அதிகரிக்கும். ராசிக்கு 9ல் சூரியன் சஞ்சாரம் இருப்ப தால் சொத்துக்களை அடைவதில் தடை கள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்க ளுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப் படலாம் கவனம் தேவை. வாக னங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல் பாட்டால் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங் கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கி டையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டா கும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.
பெண்களுக்கு: திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும்.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 18.08.2009 காலை 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 20.8.2009 காலை 11 மணி வரை இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. காரிய தடை உண்டாகலாம். எதிலும் கவனம் தேவை.
பரிகாரம்: மந்திராலயம் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர் பார்ப்பு நிறைவேறும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) எந்த சூழ்நிலையிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் தைரியமாக செயல்படும் மகரராசியினரே இந்த வாரம் காரிய தடை தாமதம் ஏற்படலாம். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 8ல் இருப்பது உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படுத்தும். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளி யூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத் தாருடன் பழகும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும்.
குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாக னங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பெண்களுக்கு: எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்க ளில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: மிகவும் கவனமாக பாடங் களை படிப்பது அவசியம். சக மாணவர் களுடன் நிதானமாக பழகுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 20.08.2009 காலை 11மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 22.08.2009 பகல் 2.15 மணிவரை இருப்பதால் வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.
பரிகாரம்: சோளிங்கர் யோக ஆஞ்சநே யரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண் டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதில் உறுதி யாக இருக்கும் கும்பராசியினரே இந்த வாரம் குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 7ல் இருப்பதால் சீரான கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக் காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 6ல் இருப்பதால் வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவ னம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.
தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்பட லாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக் கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.
பெண்களுக்கு: மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வியில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: 22.08.2009 பகல் 2.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி அன்று முழுவதும் இருப்பதால் காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்பட லாம் கவனம் தேவை.
பரிகாரம்: திருவேற்காடு தேவி கருமாரியம் மனை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். வாழ்க்கை தரம் உயரும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கவலை, பயம் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் மீன ராசியினரே இந்த வாரம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 6ல் இருப்பதால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பண வரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டா கும். மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மையால் ஆதா யத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவி யில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளை கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.
பெண்களுக்கு: மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத் தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக் கும். பணவரத்து திருப்திதரும்.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். பாடங்கள் படிப்பதில் முழுகவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: வடலூர் ராமலிங்க வள்ளலாரை தரிசித்து வர மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். |