
மெகா பட்ஜெட் படமான கந்தசாமி விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் நாயகன் விக்ரம் இந்தபடம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அசத்தலாகஇருக்கும் என்று உற்சாகமாக கூறுகிறார். "கந்தசாமி' அனுபவம் பற்றியும், அடுத்து வரும் படங்கள் பற்றியும் விக்ரம் கூறுவதாவது: கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கிய இந்த படம் உண்மையிலேயே பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. படத்தில் காஸ்டியூம், அதிரடி சாகசங்கள் எல்லாமே மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. மெக்ஸ்சிகோ, இத்தாலி என வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறோம்.