Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பாலசந்தரின் வேதனை
 
.
Sunday, 16 August, 2009 12:08 PM
.
இப்போதெல்லாம் யார் படம் பார்க்க வருகிறார்கள். பாப்கார்ன் கொறித்து விட்டு போகத்தான் தியேட்டருக்கே வருகிறார்கள் என்று சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் குமுறியதை கேட்க முடிந்தது.
.
ஞாநியால் துவக்கப்பட்ட வீடு தேடி வரும் திரைப்பட இயக்கமான கோலம் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய போது பாலசந்தர் இவ்வாறு கூறினார். முன்பெல்லாம் ரசிகர்கள் ஒரு பிரேமை தவற விட்டாலே வருந்துவார்கள். ஆனால் இப்போது கதையே போனாலும் யாரும் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன், பல படங்களில் காமெடி டிராக் தனியே அமைந்திருப்பது குறிப்பிட்டு இந்த டிராக்கில் கூட கதை இருக்கிறது. ஆனால் படத்தில்தான் கதையே இல்லாமல் போய் விடுகிறது என்று தன் பங்குக்கு குறைபட்டு கொண்டார்.
| |

மற்றவை :