Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ஒரு சாமானியனின் கதை
 
.
Sunday, 16 August, 2009 11:55 AM
.
 ஒரு சாதாரண மனிதன் பிரம்மாண்டமான சமூக பிரச்சனையை எதிர்கொள்ள துணிவதுதான் கனகவேல் காக்க படத்தின் கதை என்கிறார் புதுமுக இயக்குனரான கவின் பாலா. இவர் சரண் மற்றும் ஹரியிடம் இணை இயக்குனராக இருந்தவர்.கரண் நாயகனாக நடிக்கும் இந்த படம் பற்றி கவின் பாலா தொடர்ந்து உற்சாகமாக கூறுகிறார்...
.
இந்த படத்தில் கரண் முற்றிலும் மாறுபட்ட வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் பாத்திரத்தை உணர்ந்து தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு அருமையாக நடித்திருக்கிறார். சாதாரண மனிதனுக்கு அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாயகன் துணிச்சலாக எடுக்கும் முடிவை படம் விவரிக்கிறது.

இந்தப் படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்கிறார். கோட்டா சீனிவாசராவ், சம்பத், ராஜ்கபூர் உள்ளிட்ட 4 பேர் வில்லன்களாக நடிக்கின்றனர். சாமிக்கு பிறகு இந்தபடத்தில் நிறைவான பாத்திரம் கிடைத்திருப்ப தாக கோட்டா சீனிவாசராவ் மகிழும் அளவுக்கு அவரது பாத்திரம் அமைந்துள்ளது.

கரண் நடித்த படங்கள் இடையே மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் இது. மவுனம் கலைந்து அதுவே ஆயுதமாகும் போது என்ன நடக்கும் என்பதை படம் சுவாரசியமாக சித்தரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆகர்ஷ்னி தியேட்டர்ஸ் சார்பில் சரவணா ஆர்.தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கிஷோர் இணை தயாரிப்பை கவனித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்திற்காக கரண் புளோரா ஆடிப்பாடும் குத்துப்பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. நாக்க முக்க பாடலை போல இந்த பாடலும் அமையும் என்று இயக்குனர் எதிர்பார்க்கிறார்.

இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்னி முதல் முறையாக ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.
மின்சாரமே மின்சாரமே எனும் பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.
| |

மற்றவை :