Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
திரைப்பட தொழிலாளர்கள் மாநாடு
 
.
Thursday, 13 August, 2009 11:11 AM
.
சென்னை, ஆக.13: அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மாநாடு சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் இந்த மாநாட்டை நடத்துகிறது.
.
இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்பட தொழிலாளர்களின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. அக்டோபர் 9ந் தேதி முதல் 11ந் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. நேரு ஸ்டேடியத்தில் இம்மாநாடு துவங்க உள்ளது.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரைப்பட தொழிலாளர்களிடையே நல்லுணர்வை வளர்க்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதற்கு விழாத் தலைவராக கே.பாலசந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாநாட்டை துவக்கி வைக்க தமிழக முதல்வரை கேட்டுக் கொள்ள உள்ளோம்.

முதல் நாளன்று உறுப்பினர்களின் பதிவு நடைபெறும். 2வது நாள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு சங்க பிரதிநிதிகளின் கலந்துரையாடல் நடைபெறும். 3வது நாள் நிர்வாகிகள் தேர்தல் மற்றும் சிறப்பு மலர் வெளியிடப்படும். தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்.

தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், வினியோகஸ் தர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்க பிரதிநிதிகளும் மாநாட்டுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். மாநாட்டின் போது திரைப்பட தொழிலாளர்களின் பிரச்சனைகள் விவாதிக்கப்படும்.

மாநாடு நடைபெறும் 3 நாட்களும் படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்பு சார்ந்த எந்த வேலைகளும் நடை பெறாது. மாநாட்டில் கிடைக்கும் உபரி வருவாயை கொண்டு திரைப்பட தொழிலாளர்களுக்கான மருத்துவமனை மற்றும் பள்ளி கட்டும் திட்டம் உள்ளது. துவக்க நாள் மற்றும் நிறைவு நாளில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

விழா தலைவர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
| |

மற்றவை :