Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பொன் விழா காணும் உலக நாயகன்
 
.
Tuesday, 11 August, 2009 11:42 AM
.
"களத்தூர் கண்ணம்மா' படத்தில் பால் வடியும் முகத்தோடு அறிமுகமாகி இன்று உலக நாயகனாக உருவாகியிருக்கும் கமல்ஹாசன் திரையுலகில் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ந் தேதி முதல் முறையாக சின்னஞ்சிறு சிறுவனாக கமல் கேமரா முன் நின்றார். அன்று தொடங்கிய திரையுலக பயணத்தில் அவர் எத்தனையோ சோதனைகளையும், சாதனைகளையும் கடந்து வந்திருக்கிறார்.
.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின்னர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் "அபூர்வ ராகங்களில்' பாலச்சந்தரின் மோதிரக் கையால் குட்டப்பட்டு முத்திரைப் பதிக்க துவங்கினார். பின்னர் பாரதிராஜாவின் "16 வயதினிலே' அவரது இன்னொரு பரிமாணத்தை காட்டியது. அப்போது புகழ் பெற தொடங்கிய ரஜினியோடு இணைந்து, "நினைத்தாலே இனிக்கும்', "மூன்று முடிச்சு', "இளமை ஊஞ்சலாடுகிறது' உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கமல், "சகலகலா வல்லவன்' மூலம் வர்த்தக ரீதியான படங்களில் சிகரத்தை தொட்டார். மணிரத்னத்தின் "நாயகன்' திரைப்படம் நடிகராக கமலை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது.

இதனிடையே கமல் "ராஜ பார்வை' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி மாறுபட்ட படத்தை கொடுத்தார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பல முறை பிலிம்பேர் விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ள கமல், திரையுலகில் புதிய சோதனை முயற்சிகளில் ஈடுபட தயங்கியதில்லை.

கடந்த ஆண்டு வெளியான "தசவதாரம்' படம் கமல் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
தற்போது கமல் நடிப்பில் "உன்னை போல் ஒருவன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் அவர் திரைப்பட உலகில் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
| |

மற்றவை :