Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
"பொக்கிஷம்' 14ந் தேதி ரிலீஸ்
 
.
Tuesday, 11 August, 2009 11:41 AM
.
ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சேரனின் "பொக்கிஷம்' திரைப்படம் வரும் 14ந் தேதிக்கு திரைக்கு வருகிறது.
ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் சேரன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் "பொக்கிஷம்'. இதில் பத்மபிரியா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
.
"ஆட்டோகிராப்' பாணியில் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் கதையை அடிப்படையாக கொண்டு "பொக்கிஷம்' படம் இயக்கப்பட்டுள்ளது.

1970களில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் போன்ற தொழில்நுட்பங்கள் வராத காலத்தில் கடிதங்கள் மூலம் வளர்ந்த காதலை சேரன் இதில் அழகாக சொல்லியிருக்கிறாராம். பெரும் பாலான காட்சிகள் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் "யூ' சான்றிதழ் வழங்கி உள்ளனர். மேலும் "பொக்கிஷம்' படத்தை நல்ல படம் என்றும், மைல்கல்லாக விளங்கக் கூடிய படம் என்றும் தணிக்கை குழுவினர் பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

"பொக்கிஷம்' திரைப்படம் வரும் 14ந் தேதி திரைக்கு வருகிறது. திரையரங்க உரிமையாளர்கள் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனராம். 150 திரையரங்குகளில் இந்த படம் தமிழகம் வெளியாகிறது. சுதந்திர தினத்திற்கு முன் விருந்தளிக்க வருகிறது "பொக்கிஷம்'.
| |

மற்றவை :