Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கிராபிக்சில் கலக்கப் போறேன்
 
.
Tuesday, 11 August, 2009 11:38 AM
.
24 ஆண்டுகளுக்கு முன்னர் "யார்' படத்தை எடுத்தப்போது ஒரு காட்சியில் கூட கிராபிக்ஸ் இல்லாமல் திகிலூட்டி இருந்தேன். ஆனால் இப்போது "பவுர்ணமி நாகம்' படத்தில் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளோடு கலக்கப் போகிறேன் என்கிறார் "யார்' கண்ணன்.
.
பரத் சினி மீடியா தயாரிக்க மும்பையை சேர்ந்த முமைத்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படம் பற்றி யார் கண்ணன் கூறியதாவது: பாம்பு கதையை மையமாக கொண்டு இதுவரை எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. இதுவும் பாம்பு கதைதான். ஆனால் மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.

கிராபிக்ஸ் உதவியோடு கற்பனையான உலகத்தில் இந்த கதையை சொல்லியிருக்கிறேன். படப்பிடிப்பிலும் புதிய உத்திகளை பயன்படுத்துகிறோம்.

யார் படத்தை எடுத்தபோது அதில் ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட கிடையாது. ஆனால் இந்த படத்தில் 75 சதவீத காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்துகிறோம்.

நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி உள்ளோம். எப்பொழுதுமே கற்பனை கலந்த கதைகளில் ஒரு சுவாரசியம் இருக்கும். அது மட்டுமல்ல கற்பனை உலகில் நடக்கும் கதையில் எப்போதுமே தீமையை நல்லது வெல்லும் செய்தியை சொல்ல முடியும்.

எனவேதான் நான் இத்தகைய படங்களை விரும்புகிறேன். தொடர்ந்து கற்பனை உலகில் நடக்கும் திரில்லர் படங்களையே எடுக்க விரும்புகிறேன். இந்தப் படத்தில் முமைத்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மானசா மற்றும் நாகம்மா ஆகிய இரண்டு பாத்திரங்களில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இதுவரை ஒரு பாட்டுக்கு நடனமாடி செல்லும் நடிகையாகவே அவரை பார்த்திருக்கும் ரசிகர்கள் இந்தப் படத்தில் வித்தியாசமான முமைத்கானை பார்க்கலாம்.

கருணாஸ் மற்றும் ஆதித்ய மேனன் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் துடிப்பான இசையை அமைத்து தந்திருக்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக முமைத்கானோடு கருணாஸ் நடனமாடியிருக்கிறார். முமைத்கானோடு நடனமாடுவதை நினைத்து கருணாசுக்கு காய்ச்சலே வந்து விட்டதாம்.
| |

மற்றவை :