ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக் கும் வெள்ளை உள்ளம் கொண்ட ரிஷப ராசி யினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத் தால் வார தொடக்கத்தில் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியாதிபதி சுக்கரன் சஞ்சாரம் ராசிக்கு இரண்டில் இருப்பதால் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். அதிசாரமாக ராசிக்கு 10ல் சஞ்சாரம் செய்த குரு வக்கிரநிலை அடைந்து ராசிக்கு 9ம் இடமான மகரத்தில் சஞ்சாரம் செய்வதால் வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங் கள் கைகூடும்.
தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறு வீர்கள்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட் கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை கள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.
பெண்களுக்கு: திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
சந்திராஷ்டமம்: 02.08.2009 அதிகாலை 4.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 04.08.2009 அன்று மாலை 4.20 மணி வரை இருப்பதால் எதிலும் தாமத மான போக்கு வீண் அலைச்சல் ஏற்பட லாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடு வது நல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக் கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
யானையை பூனையாக்குவதும், பூனையை யானை ஆக்குவதும் என்பது போல எந்த விஷயத்திலும் சின்னதை பெரியதாகவும், பெரியதை சிறியதாகவும் மாற்றும் கலையை அறிந்த மிதுன ராசியி னரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் தேவையான உதவிகள் கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும். ராசியாதிபதி புதன் சஞ்சாரம் வீண் அலைச்சலை தரும். உழைப்பு அதிகரிக்கும். குருவின் சஞ்சாரம் அதிசாரமாக கும்பராசியில் இருந்தது வக்கிரம் பெற்று மீண்டும் மகர ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங் களால் வீண் செலவு உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணி களை மேற்கொள்வது நல்லது. மேல் அதி காரிகள் மற்றும் சக ஊழியர்களை அனு சரித்து செல்வது நன்மை தரும்.
குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனு சரித்து செல்வது நன்மை தரும். பிள்ளை கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
பெண்களுக்கு: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
சந்திராஷ்டமம்: 04.08.2009. அன்று மாலை 4.20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 07.08.2009 அன்று காலை 3.50 மணி வரை இருப்பதால் வீண் அலைச் சல் தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சி களை தள்ளிபோடுவது நல்லது.
பரிகாரம்: சென்னையிலுள்ள சென்ன கேசவபெருமாளை புதன்கிழமையில் தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
என் கடமை பணி செய்து கிடப்பதே என்பது போல பிரதிபலன் எதிர்பார்க்கா மல் காரியங்களை செய்யும் குணமு டைய கடகராசியினரே இந்த வாரம் ராசி யாதிபதி சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்ப்பு கள் விலகும். எல்லா நன்மைகளும் உண் டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக் கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். ராசிக்கு எட்டில் அதிசாரமாக இருந்து காரிய தடைகள் கூடுதல் செலவு உண்டாக்கிய குரு இந்த வாரம் வக்கிரம் பெற்று ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற மான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப் படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
பெண்களுக்கு: புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும்.
மாணவர்களுக்கு: கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: 7.8.2009 அன்று அதிகாலை 3.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 8.8.2009 அன்று முழுவதும் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை. வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம்.
பரிகாரம்: திருக்கடையூர் அபிராமி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
எதையும் தாங்கும் இதயம் என்பதுக் கேற்றார் போல் எதைக்கண்டும் கலங்கா மல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத் தால் மனக்கவலை உண்டாகும். எதிர் பாராத செலவு ஏற்படும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரம் முயற்சிகளில் தடையை ஏற்படுத்தும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். ராசிக்கு 7ல் அதிசாரம் பெற்று சஞ்சாரம் செய்த குரு இந்த வாரம் வக்கிரம் பெற்று ராசிக்கு 6ல் சஞ் சாரம் செய்வதால் இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்க ளிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறை யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.
குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள் ளைகள் சொல்வதை கேட்டு நிதான மாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.
பெண்களுக்கு: எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமத மாகும். மனகவலை ஏற்படலாம்.
மாணவர்களுக்கு: கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணர்ந்து வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கன்னிராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் பிரயா ணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்ட மிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். ராசியாதிபதி புதன் சஞ்சாரம் வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். ராசிக்கு 6ல் அதிசாரம் பெற்று சஞ்சாரம் செய்த குரு இந்த வாரம் வக்கிரம் பெற்று ராசிக்கு 5ல் சஞ்சரிக்கிறார். இதனால் வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப் பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறு வார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோ ஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற் றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.
பெண்களுக்கு: வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: திருநீர்மலை நீலமுகில் வண்ண பெருமாளை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற் கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறு பக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் துலா ராசி யினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத் தாரால் நன்மை உண்டாகும். ராசிக்கு5ல் அதிகாரம் பெற்று சஞ்சாரம் செய்த குரு இந்த வாரம் வக்கிரம் பெற்று ராசிக்கு 4ல் சஞ்சரிக்க தொடங்குவதால் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.
குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு: எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு: கவன தடுமாற்றம் ஏற் படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமையில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதற்கேற்றவாறு எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக் கிடும் குணமுடைய விருச்சிக ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். ராசியாதிபதி செவ் வாய் சஞ்சாரத்தால் வீண் பகை உண்டாக லாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. ராசிக்கு 4ல் அதிகாரம் பெற்று சஞ்சாரம் செய்த குரு இந்த வாரம் வக்கிர நிலை பெற்று ராசிக்கு 3ல் சஞ்சாரம் செய்வதால் நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல் படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர் களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டை கள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒரு வருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல் வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பெண்களுக்கு: சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையு டன் நடந்து கொள்வது நல்லது.
மாணவர்களுக்கு: இருசக்கர வாகனங் களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனசு ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் தன்னம்பிக் கையை வளர்க்கும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக் கும். ராசிக்கு 3ல் அதிகாரம் பெற்று சஞ்சாரம் செய்த ராசியாதிபதி குரு இந்த வாரம் வக்கிரம் பெற்று ராசிக்கு 2ல் சஞ்சரிக்க தொடங்குவதால் வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக் கும். பெயரும், புகழும் கூடும்.
தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத் துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.
பெண்களுக்கு: திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோ திடம் கூடும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதக மான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம்,
திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங் காத அஞ்சா நெஞ்சம் உடைய மகர ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ் சாரத்தால் வீண் செலவு ஏற்படும். காரியங் களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு மன சோர்வு வரலாம். ராசியாதிபதி சனி ராசிக்கு 8ல் புதனுடன் சஞ்சரிப்பதும் ராசியில் ராகு சஞ்சாரம் செய்tவதும் மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ராசிக்கு இரண்டில் அதிகாரம் பெற்று சஞ்சரித்த குரு இந்த வாரம் வக்கிரம் பெற்று ராசியில் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
குடும்பத்தில் நிம்மதி குறையும்படி யான ஏதாவது சம்பவங்கள் நடக்க லாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத் தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்க ளிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
பெண்களுக்கு: எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்ற மடைய கடின உழைப்பு தேவை. எல்லோ ரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பக வானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற கும்பராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் எல்லா வகை யிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர் களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். ராசியாதிபதி சனி யின் சஞ்சாரம் உடல் உழைப்பை அதிக ரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங் கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. ராசியில் அதிகாரமாக சஞ்சாரம் செய்த குரு இந்த வாரம் வக்கிரம் பெற்று ராசிக்கு 12ல் செல்வதால் சுப செலவு கள் உண்டாகும். கையிருப்பு கரையும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக் கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்ல லாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.
குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்து டன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.
பெண்களுக்கு: அடுத்தவர்கள் பொறுப்பு களை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.
மாணவர்களுக்கு: மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவ காரங்களை விட்டு விலகுவது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தா லும் பிடிக்காவிட்டாலும் நான் செல்வது தான் சரி என்று உறுதியாக கூறும் மீன ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் காரிய அனுகூலங்களை தரும். மனோ திடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். இதுவரை ராசியாதிபதி குரு அதிசாரமாக ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்தார். இந்த வாரம் வக்கிரம் பெற்று ராசிக்கு 11ல் சஞ்சரிக்க தொடங்குகிறார். இதனால் செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல் கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலை பளு குறையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட் களை வாங்கி திருப்தியடைவீர்கள்.
பெண்களுக்கு: மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.