Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ரெட்ஒன் கேமராவில் எதிர்மறை
 
.
Sunday, 02 August, 2009 03:04 PM
.
 தொழில்நுட்பத்தில் பரீச்சியம் உள்ள ஜி.அருண் ஈஸ்கோப் இன்டர்நேஷனல் எனும் பட நிறுவனத்தின் மூலம் உருவாக்கி உள்ள படம் எதிர்மறை. வித்தியாசமான கதையம்சத்தோடு நல்ல படத்தை தமிழில் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலோடு இந்த படத்தை அவர் உருவாக்கி உள்ளார்.
.
இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட்ஒன் கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படமாக இது அமைகிறது. மேலும் பேன்டம் கேமராவிலும் முதன் முறையாக பயன்படுத்தி உள்ளனர்.

தொழில்நுட்ப சிறப்புமிக்க இந்தப் படத்தை ஒரு உளவியல் சார்ந்த த்ரில்லர் படமாக எடுத்திருக்கிறார். சிபிஐ அதிகாரி ஒருவரின் சொந்த வாழ்க்கையும், அவர் விசாரிக்கும் தொடர் கொலைகளுக்கும் இடையே கதை பின்னப்பட்டுள்ளது.

ரெட்ஒன் கேமராவின் தொழில்நுட்ப சிறப்பை இந்த படத்தில் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் அருண். படத்தின் கதைக்களம் சென்னை தான். பெரும்பாலான காட்சிகளை பிரத்யேக செட் போட்டு எடுத் துள்ளனர். புதுமுகங்கள் அஜய்குமார், ராகேஷ், பானுஸ்ரீ, ஷீரினா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி.அருண் எழுதி இயக்கியுள்ளார். படத்தின்முதல்நாள் ஷýட்டிங் தொடங்கி வெளியாவது வரை அனைத்துமே டிஜிட்டல்மயமாக திட்டமிட்டுள்ளனர். பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். முருகன் மோகன் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மும்பையை சேர்ந்த பாலே நடனக்கலைஞர் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
| |

மற்றவை :