ஸ்ரீ சரவண பவ மூவிஸ் சார்பில் எஸ்.பி.ராமமூர்த்தி தயாரிக்கும் படம் "பயணங்கள் தொடரும்'. எஸ்.பி.ஆர். ராஜா இயக்கும் இந்தப் படத்தில் சந்திரஹாசன் நாயகனாகவும், ஸ்வேதா நாயகியாகவும் நடிக்கின்றனர். பஸ்சிலேயே நடக்கும் கதையாக அமைந்த மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, 12பி, சுந்தரா டிராவல்ஸ் வரிசையில் இந்த படத்தின் கதையும் பஸ்சிலேயே நடைபெறுவது போல அமைந்துள்ளது. |
தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் பஸ்சில் நடத்துனராக வேலை பார்க்கும் வாலிபருக்கும், அதில் தினந்தோறும் பயணம் செய்யும் கல்லூரி மாணவிக்கும் ஏற்படும் காதல் பயணமே படத்தின் கதை. இந்த படத்தில் கஞ்சா கருப்பு, ஷகிலா, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வர உள்ளது. |