பிரபா, உதயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இதில் பிரபா ஏற்கனவே வெளியான "பிறப்பு' மற்றும் தற்போது தயாராகி வரும் "தோழி' ஆகிய படத்தில் நடித்துள்ளார். "உளியின் ஓசை' படத்தில் உதயா நடித்துள்ளார். கதாநாயகியாக கேரள அழகி உன்னிமாயா நடிக்கிறார். மற்ற இரு நண்பர்களாக சர்வமதி, பத்மகுமார் அறிமுகமாகின்றனர்.
இவர்களுடன் காதல் தண்டபாணி, "மகாநதி' சங்கர், மாணிக்க விநாயகம், எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக ஸ்ரீதர் அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.சி.துரைசாமி இயக்குகிறார். எஸ்.பாலா ஒளிப்பதிவில் சி.டி.சாஜு இசையமைக்கிறார்.
சதீஸ் எடிட்டிங்கில் "நாக் அவுட்' நந்தா சண்டைப் பயிற்சி அளிக்க ஜெ.பி.ஆறுமுகம் தயாரிப்பு நிர்வாகத்தில் பழனிபாரதி பாடல்கள் எழுதுகிறார். ஆர்.தர்மராஜ் படத்தை ஜனரஞ்சமாக தயாரிக்கிறார். படப்பிடிப்பு பழநி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. |