ஆனால் முன்னர் நடிப்பதாக இருந்த ஸ்ரேயா படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக, யாவரும் நலம் பட நாயகி நீத்துசந்திரா நடிக்கிறார். படத்தில் மொத்தம் 3 நாயகிகள். இன்னொரு நாயகியாக தனுஸ்ரீ தத்தா நடிக்கிறார். மற்றொரு நாயகி புதுமுகம். பிரகாஷ்ராஜ், மௌலி, சந்தானம், ஊர்வசி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் ஷýட்டிங் சென்னையில் தொடங்கி ஐதராபாத், கொச்சி, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்க வேண்டும் என நினைக்கும் நாயகனின் வாழ்க்கையில் 3 பெண்கள் குறுக்கிடும் போது அவனுக்கு ஏற்படும் அனுபவத்தை நகைச்சுவையோடு இந்த படம் விவரிக்க உள்ளது. சண்ட கோழி, திமிரு, தாமிரபரணி படங்களுக்கு பிறகு விஷாலோடு இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இணைகிறார். |