ஹரிவரூண், அன்சாரி, ஷிவானி என புதுமுகங்கள் நடிக்க சுபா சினி புரொக்ஷன்ஸ் சார்பில் உருவாகும் படம் தனிவழி. ஜே.எஸ்.குமார் தயாரிக்க, எஸ்.பி. கிஷோர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஷýட்டிங் சென்னையில் தொடங்கி நாமக்கல், கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. |
படத்தின் கதைபடி நாயகன் குடிசை பகுதியில் வாழ்பவன். பணக்காரர் களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு கொடுப்பது அவனது கடமை. அதே பகுதியில் இருக்கும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றில் ஊறிப்போன காவல் துறை அதிகாரியான சங்கரின் முறைப்பெண் ரஞ்சனியை அவன் காதலிக்க, ஏற்படும் சிக்கல்களும் அவை எப்படி தீர்கின்றன என்பதும்தான் படத்தின் கதை. தீனா இசையில் நா.முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார். |