
"ரேனிகுண்டா' படத்தின் ஹைலைட்டாக அதன் கிளைமாக்ஸ்தான் அமைய போகிறது என்று நம்பிக்கையோடு இருக்கிறார் இயக்குனர் பன்னீர்செல்வம். இயக்குனர் லிங்குசாமியிடம் தயாரான இவர் பிலிம் பேப்ரிகேட்டர்ஸ் சார்பில் மகேந்திர குமார் ஜெயின் தயாரிக்க புதுமுகம் ஜானியை நாயகனாக வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளார். தனது ஊரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை அவர் எடுத்திருக்கிறாராம்.