காதல், காமெடி, ஆக்ஷன் என இந்த படம் உருவாக உள்ளது. இதுவரை பல புதுமுகங்கள் மற்றும் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து உருவாக்கி உள்ள ஆர்.பி.சௌத்ரி இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கும் சக்ரியை தமிழுக்கு கொண்டு வருகிறார்.
அடுத்த மாதம் ஷýட்டிங் தொடங்க உள்ளது. கொடைக்கானல், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஷýட்டிங் நடைபெற உள்ளது. இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறாராம். அவருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பாடல்களை நா.முத்துக் குமார் எழுதுகிறார். ஆர்.பி.சௌத்ரி தனது இன்னொரு மகன் ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தையும் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. |