
"கிருஷ்ண லீலை' எனும் பெயரை கேட்டதுமே காதல் படமாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையில் இது சமூக அவலங்களை தட்டிக் கேட்கும் ஆவேச இளைஞனின் கதை இது என்கிறார் இயக்குனர் ஸெல்வன். கே.பாலசந்தரின் கவிதாலயாவின் 52வது படமாக கிருஷ்ண லீலை உருவாகி உள்ளது. புஷ்பா கந்தசாமி தயாரிப்பில் ஜீவன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மேக்னா நடிக்கும் இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஷýட்டிங் முடிந்து சுதந்திர தினத்தன்று ரிலீசாகிறது.