
காதல் செய்ய விரும்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இளம் நாயகன் சந்தோஷ், தற்போது நடித்து வரும் மிட்டாய் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். நட்பா, காதலா இரண்டில் எது இனிப்பானது எனும் கேள்விக்கு விடையாக அமையும் இந்த படம் தனக்கு நல்ல பெயர் வாங்கி தரும் என்று அவர் எதிர்பார்ப்போடு இருக்கிறார்.