Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
3-டி ஒலியில் ரீமிக்ஸ்
 
.
Sunday, 19 July, 2009 10:40 AM
.
எம்ஜிஆர் டிஜிட்டல் ஸ்டுடியோவில் துவக்கி உள்ள எம்ஜிஆர் நம்பி, எம்ஜிஆர் ஸ்டுடியோ சார்பில் தயாரித்து இயக்கி வரும் படம் ‘பொறுத்திரு’. எம்.பி.ஏ. பட்டதாரியான மது மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய பெண் எலிசியா இந்த படத்தில் நடிக்கின்றனர்.
.
தீவிர எம்ஜிஆர் ரசிகனான இயக்குனர், எங்க வீட்டு பிள்ளையில் இடம் பெறும் நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தி இருக்கிறார். மூலப்பாடலை மாற்றாமல் பயன்படுத்தி இருப்பதோடு லண்டனில் 3-டி ஒலியில், ரீமிக்ஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

இவர் அமைத்துள்ள டிஜிட்டல் ஸ்டுடியோ அதிநவீன கருவிகளை கொண்டதாக உள்ளது. தற்போதைய நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக இந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது. சிறிய படங்களுக்கு இந்த ஸ்டுடியோ வரப்பிரசாதமாக அமையுமாம்.

இந்நிறுவனத்தின் சார்பில் அடுத்ததாக மாதவன், ராஜ்கிரண் நடிக்க ஒரு படம் தயாராகிறது. அதன் பிறகு முன்னணி இயக்குனரின் மற்றொரு படம் தயாராகிறது.
| |

மற்றவை :