காதலுக்காக ஒருவன் தன் நிலைகளை மாற்றிக் கொண்டு வெவ்வேறு பரிமாணங்களாக தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்குமு“ சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காதல் கதைதான் இப்படத்தின் கரு. இது நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான கதை.
இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெறுகிறது. அதில் இரண்டு பாடல்கள் அயல்நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் பொல்லாக் இதில் இசையமைப்பதில் மூலம் முதன் முதலாக அறிமுகமாகிறார். இப்பாடல் களுக்கு அனுராதா ஸ்ரீராம், பின்னி, ஸ்வேதா ஆகியோர் பாடியுள்ளார். நடிப்பதோடு இயக்கத்திற்கும் அஜாஸ் பொறுப்பேற்றுள்ளார். செப்டம்பரில் திரைக்கு வருகிறது. |