Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
இளமைத் துள்ளல்
 
.
Sunday, 19 July, 2009 10:27 AM
.
 எனக்கா ‘மணி’ உனக்கா எனும் வித்தியாசமான பெயரில் தயாராகி வரும் படத்தில் பிரியாமணி நாயகியாகவும், இளம் நாயகன் நிதின் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கின்றனர். ஸ்ரீலஷ்மி சூப்பர் குட் பிலிம்ஸ் டி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சீதா, முகேஷ், மும்பை கவர்ச்சி புயல் ராக்கி சவந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
.
மும்பை நிழல் உலக தாதா ஒருவன் நேர்மையான போலீஸ் அதிகாரியின் மகனான நாயகனை கடத்தி விட அங்கே தன்னை போல பல இளைஞர்கள் இருப்பதை கண்டு அவன் திடுக்கிட்டு போகிறானாம். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை படம் விவரிக்கிறது.

இந்த படத்தில் பிரியாமணி பருத்தி வீரனுக்கு நேர் எதிராக மிகவும் கவர்ச்சியாக இளமை துள்ளலோடு நடித்திருக்கிறாராம்.
அனுப் ரூபேன்ஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.
| |

மற்றவை :